SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவப் புரட்சி

2019-09-04@ 15:15:01

நன்றி குங்குமம் முத்தாரம்

மரணம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பது காலம் காலமாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு டயலாக். ‘‘இனி மரணம் எப்போது வரும் என்பதை கண்டுபிடித்துச் சொல்ல முடியும்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதாவது ஒருவர் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கப்போகிறார் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக கணிப்பதற்கான இரத்தப் பரிசோதனை முறை வரப்போகிறது. அதன்படி ஒருவரின் ரத்தத்தை ஆய்வு செய்து இன்னும் பத்து ஆண்டுகள் வரை அவர் இருப்பார் என்று அந்த ஆய்வில் சொல்ல முடியும்.

ஜோரிஸ் டீலன் மற்றும் எலைன் என்ற இரு மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கின்றனர். இதற்காக 18 முதல் 109 வயது வரையிலான 33 ஆயிரம் பேரை  ஆய்வு செய்திருக்கின்றனர்.ஆய்வுக்குட்பட்டவர்கள் எல்லோருமே நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்தவர்கள். அவர்களின் 16 வருட கால ஹெல்த்தை ஆய்வு செய்து அவர்கள் எப்போது மரணிக்கப்போகிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தப் பரிசோதனை மட்டும் நடைமுறைக்கு வந்தால் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அள்ளும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்