SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசத்தல் போன்

2019-09-04@ 15:13:32

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ‘ஷியோமி’க்குத் தனி இடம் உண்டு. கடந்த வருடம் ‘Mi A2’ என்ற மாடலை இங்கே களமிறக்கியது. அதன் விற்பனை சக்கைப்போடு போட்டது. இருந்தாலும் சில குறைகளை வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டினர். அந்தக் குறைகளை எல்லா வகையிலும் அப்டேட் செய்து ‘Mi A3’ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தி யுள்ளது ‘ஷியோமி’. குறிப்பாக கேமரா, டிசைன், ஹார்டு வேர், பேட்டரி திறனில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு மாடல் களில் இந்த போன் கிடைக்கின்றது. 48 எம்பியில் பிரைமரி கேமரா, 8 எம்பி யில் அல்ட்ரா வைடு லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 2 எம்பியில் ஒரு கேமரா என மூன்று கேமராக்கள். இதுபோக 32 எம்பியில் செல்ஃபி கேமரா கெத்துகாட்டுகிறது. 48 எம்பி கேமராவில் பொருத்தப் பட்டுள்ள சோனி சென்சார் ‘ரெட்மி நோட் 7 ப்ரோ’ போனின் கேமரா வுக்கு சவால் விடுகிறது.

Qualcomm Snapdragon 665 பிராசஸரால் இயங்கும் இந்த போனின் ஸ்டோரேஜை 256 ஜிபி வரைக்கும் நீட்டித்துக்கொள்ள முடியும். 1560 x 720 பிக்ஸல் ஸ்கிரீன் ரெசல்யூசனு டன் 6.08 இன்ச்  AMOLED டிஸ்பிளே நம்மை வசீகரிக்கிறது.  4030 mAh திறன்கொண்ட பேட்டரி சீக்கிரமாக முழு சார்ஜாவது டன் ஒரு நாள் முழுக்க பேட்டரியை உயிரோடு வைத்திருக்கி றது. இப்போது இந்த போன் ஆன்லைன் மற்றும்  ஷியோமியின் ஷோரூம்களில் கிடைக்கிறது. விலை ரூ.12,999 - ரூ.15,999


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்