SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்

2019-09-04@ 14:15:59

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்மார்ட்போன் பயனாளர்களின் முக்கிய குற்றச் சாட்டே பேட்டரி ரொம்ப நேரம் நிற்பதில்லை என்பது தான். அது எந்த நிறுவன போனாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு மட்டும் மாறுவதில்லை. தவிர, நாளாக நாளாக சார்ஜைத் தாங்கும் திறன் பேட்டரிக்குக் குறைந்து கொண்டே வருகிறது. எந்த நேரத்தில் பேட்டரி தன்னுடைய செயலை இழக்கும் என்று துல்லியமாக சொல்ல முடியாது. சில நேரங்களில் பேட்டரி திணறக்கூட செய்யும். 2017-இல் ஐபோன் பேட்டரிகள் திணற ஆரம்பித்ததும் அதன் பயனாளிகள் இணையத்தில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தைக் கழுவி ஊற்றினார்கள். தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு பேட்டரியின் திறனை மேம் படுத்துவதாக ஒப்புதல் அளித்தது ‘ஆப்பிள்’. இந்நிலையில் டெக் வல்லுநர்கள் உங்களின் பேட்டரி திறனைப் பாதுகாக்கவும், சார்ஜை ரொம்ப நேரம் தக்க வைக்கவும் சில ஆலோசனைகளைத் தந்துள்ளனர்.

முதலில் உங்கள் போனின் சாப்ஃட் வேர்களை அப்டேட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஐபோன், சாம்சங் போன்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி சாப்ஃட்வேரை அப்டேட் பண்ணச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கும். இது பல நேரங்களில் எரிச்சலூட்டும். இருந்தாலும் அப்டேட் செய்து கொள்வது நல்லது. பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க இந்த சாப்ஃட்வேர் அப்டேட் பெரும் உதவி செய்கிறது.அடுத்து  ஆப்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம் சார்ஜை எடுத்துக்கொள்கிறது என்ற கிராப் உங்களின் ஸ்மார்ட்போனிலேயே இருக்கும். அதிக சார்ஜை உறிஞ்சும் ஆப்களை தேவையானபோது மட்டும் பயன்படுத்திவிட்டு அணைத்து வைத்துவிடுவது நல்லது.

ஸ்கிரீன் வெளிச்சம் சார்ஜை அதிகமாக தின்னும். தொடர்ந்து ஸ்கிரீனின் வெளிச்சம் அதிகமாக இருப்பது தொடர்ந்தால் பேட்டரியின் வாழ்நாள் குறையும். அதனால் ஸ்கிரீனை மங்கலாக வைத்துக்கொள்வது சார்ஜை ரொம்ப நேரம் தாக்குப்பிடித்துக்கொள்வதோடு பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கவும் உதவுகிறது. மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வை-பை இணைய வசதியைப் பயன் படுத்துவது சிறந்தது. அப்போது ஏரோபிளேன் மோடில் கூட போனை வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிலும் பேட்டரி சேவர் அல்லது லோ பேட்டரி மோட் இருக்கும். இதை சார்ஜ் குறையும்போது போனின் ஸ்கிரீனில் தெரியவரும். பெரும்பாலானவர்கள் இதை மூடி விடுவார்கள். இது தவறானது. பேட்டரி சேவரைப் பயன்படுத்துவது அதன் வாழ்நாளை நீட்டிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்