SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 29,832-க்கு விற்பனை... நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

2019-09-03@ 16:06:10

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 29,832 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் பவுன் ரூ.30 ஆயிரத்தை தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஆகஸ்டு 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், குறைவதுமானபோக்கு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. அதாவது, கடந்த 30ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.29,456க்கும் 31ம் தேதி ரூ.29,528க்கும் விற்பனையானது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3,702க்கும், பவுன் ரூ.29,616க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,718க்கும், பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ஒரு பவுன் ரூ.29,744க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 29,832 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்க்ததின் விலை கிராமிற்கு ரூ.27 உயர்ந்து ரூ.3729-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசு உயர்ந்து ரூ.52.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் வரும் நாட்களில் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்