SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்

2019-09-03@ 14:46:59

புதுடெல்லி:  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஆக. 21ம் தேதி நள்ளிரவு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் கடந்த 12 நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறார். நேற்றுடன் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில், ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கக் கோரி அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். ஆனால் சிபிஐ தரப்பில், ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி தன்னை சிபிஐ கைது செய்த விதம் சரியில்லை என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோரும், சிபிஐ விசாரணை அதிகாரி பார்த்தசாரதி, மற்றும் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் ஆஜராயிருந்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்