SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறக்கும் மனிதர்

2019-09-03@ 12:16:39

நன்றி குங்குமம் முத்தாரம்

இன்று மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்லும் அளவுக்கு அவனது பரிசோதனை முயற்சிகளும், தொழில்நுட்பங்களும் வானளவு  வளர்ந்துவிட்டன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பறவையைப் போல பறக்க நினைத்தான். விமானம் என்ற அலுமினியப் பறவை நமக்குக் கிடைத்தது.  இப்போது பறவையாகவே மாற நினைத் திருக்கிறான். ஃப்ளைபோர்டு என்ற அதிசய சாதனம் கிடைத்திருக்கிறது.ஆம்; பிரான்ஸச் சேர்ந்த விஞ்ஞானி  ஃப்ராங்கி ஸபாட்டா அந்தரத்தில் பறக்கும் விதமாக ஒரு ஃப்ளைபோர்டை உருவாக்கி அதில் பறந்தும் காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் பறக்கும் தட்டில்  சூப்பர் ஹீரோக்கள் பறந்து வரும் காட்சியை வாயைப் பிளந்து பார்த்தோம். அதே மாதிரி ஃப்ராங்கி ஃப்ளைபோர்டில் பறந்து சாதித்துக் காட்டியதை  ஆயிரக்கணக்கான மக்கள் வியந்து பார்த்துள்ளனர். சாகச விளையாட்டுகளில் தீவிர ஈடுபாடுள்ள சிறுவனாக வளர்ந்தார் ஃப்ராங்கி ஸபாட்டா. 16 வயதிலேயே ஜெட் ஸ்கை எனும் தண்ணீரின் மீது ஓடும்  வாகனத்தை வேகமாக இயக்கி சாதனை படைத்துள்ளார். சாகச விளையாட்டுகளுக்காக நடத்தப்படும் ‘ரன் 1’ வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில்  பலமுறை சாம்பியன் பட்டத்தைத் தட்டியுள்ளார்.

அத்துடன் இருபது வயதிலேயே கடலுக்குள் பயணம் செய்ய ஸ்கூட்டர் போன்ற ஒரு  வாட்டர்கிராஃப்ட்டை தனக்காக ஸ்பெஷலாக உருவாக்கினார். தண்ணீரில் சாகசம் செய்தது போதும், இனி வானத்தில் பறக்க வேண்டும் என்று  எண்ணியிருக்கிறார். பல வருட சோதனை முயற்சிகளுக்குப் பிறகு பறவையைப் போல வானில் பறக்க ஃப்ளைபோர்டைக் கண்டுபிடித்துவிட்டார்.  இதையெல்லாம் அவர் மூன்று வருடங்களுக்கு முன்பே செய்து விட்டார். இருந்தாலும் தனது புதிய கண்டுபிடிப்பை இப்போது  தான் வெளிச்சத்துக்குக்  கொண்டு வந்திருக்கிறார்.

ஆம்; சில நாட்களுக்கு முன்பு தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலீஷ் கால்வாயை ஃப்ளை போர்டில் பறந்து கடந்து  முத்திரை பதித்துள்ளார் ஃப்ராங்கி. அவர் கடந்த துரம் சுமார் 35 கிலோமீட்டர். இதை வெறும் 22 நிமிடங்களில் பறந்து கடந்துள்ளார். மணிக்கு 170  கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துள்ளார். இந்த மாதிரி ஃப்ளைபோர்டில் பறக்கும்போது ஏற்படும் முக்கிய பிரச்னை எரிபொருள் குறைந்துபோவது  அல்லது அது சரியாக இஞ்ஜினை இயக்காமல் விட்டுவிடுவது தான். இது  ஃப்ராங்கிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இதே இங்கிலீஷ் கால்வாயை ஜூலை  மாதம் கடக்க அவர் முயற்சித்த போது எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அது தோல்வியடைந்தது.  அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பலில் விழுந்து  உயிர்பிழைத்தார். இந்த முறை அவருக்குத் துணையாக ஹெலிகாப்டர்களும், பெரிய கப்பல் ஒன்றும் உடன் வந்தன. பறக்கும்போது இடை யில் எரிபொருள்  தீர்ந்துவிட்டால் நிரப்புவதற்கு ஏற்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

அதனால் எந்தவித பதற்றமும் இல்லாமல் லாவகமாக சாதனையை  அரங்கேற்றியுள்ளார். ஃப்ராங்கியின் பறக்கும் தொழில்நுட்பம் வருங்காலத்தில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தலாம் என்ற நம்பிக்கையில்  பிரான்ஸ் அரசு  அவருக்கு நிதிஉதவி செய்ய முன்வந்துள்ளது. ‘‘வர லாற்றில் முக்கிய நிகழ்வு...’’ என்று ஃப்ராங்கியின் சாதனையைப் பத்திரிகைகள் பாராட்டுகின்றன.  ஆனால், அவரோ ‘‘காலம்தான் அதற்கு பதில் சொல்லும்...’’ என்கிறார் கூலாக.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்