SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரான்ஸ்பர் கேட்டு நச்சரிக்கும் மாங்கனி மாவட்ட போலீசார் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-03@ 02:16:07

சென்னை: ‘‘கிப்ட் தரப்பு புது நிர்வாகிகளை நியமித்து வருதை பார்த்தால் என்ன தோணுது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைப்பறவையின் கனவான இலையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதை மண் தோண்டி புதைத்து வருவதாக அவர்கள் கட்சிக்குள்ளேயே பேச்சு எழுந்துள்ளது. அப்புறம், ஆட்சியில் இருக்கும் வரை இலையை உடைக்க முடியாது. ஸ்லீப்பர்செல்கள் கூட இலையுடன் ஐக்கியமாகிவிட்டதால் கிப்ட் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டாராம். சிறைப்பறவை வெளியே வரும் வரை ெதாண்டர்கள், நிர்வாகிகள் இல்லாத லெட்டர் பேடு கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதைவிட புது நபர்களுக்கு பதவி கொடுத்து பதவியில் இருக்க முடிவு செய்தாராம். புது நிர்வாகிகள் பட்டியல். இப்போது போடவில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலின்போது பூத் ஏஜென்ட் கூட கிடைக்க மாட்டார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்ட காக்கிகள் சரியாக தூங்கி இரண்டு வருஷமாச்சாமே...’’

‘‘கடந்த 2 ஆண்டுகளாக விவிஐபி வருகையை நினைத்து தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்காங்களாம். அதிலும், சமீப காலமாக தமிழக விவிஐபி வந்து விட்டால் போதும், அனைவரையும் கால்கடுக்க ரோட்டில் நிற்க விடறாங்கனு போலீஸ்காரர்கள் முதல் கொண்டு அதிகாரிகள் வரை புலம்பித் தள்ளுகிறார்களாம். அத்திவரதர் பாதுகாப்பை முடித்ததும், ஒரு வாரத்திற்கு மாங்கனி நகருக்கு வந்த விவிஐபி பாதுகாப்பு பணியை முடித்தோம்.. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு வழங்கும் நிலையில், இன்னும் 10 நாளில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, நேரடியாக மாங்கனி நகருக்கு விவிஐபி வருகிற தகவல் வெளியாகியிருப்பதால், இந்த ஊரை விட்டு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாமான்னு காக்கிகள் பேசிக்கிறாங்களாம். அதுவும் 11ம் தேதி மாங்கனி நகருக்கு வந்து, ஒரு வாரம் விவிஐபி இருக்க போறாராம் என அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், ஆயுதப்படை காக்கிகள் எல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்காங்களாம். நமக்கு ஓய்வே கிடையாதா... பேசாம இந்த நகரை விட்டு வேறு இடத்திற்கு போயிடலாம் என தெரிந்த உயர் அதிகாரிகளிடம் டிரான்ஸ்பருக்கு ரெக்கமண்ட் கேட்டுட்டு இருக்காங்களாம் காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரி வீட்டு விசேஷத்துக்காக ரேஷன் கடையை திறக்காம இருந்தாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஆமா.. மதுரை மகால் ரோட்டில் உள்ள சிவாஜி கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் 19 ரேஷன் கடைகள் இருக்கு. இந்த கூட்டுறவு சங்கத்தின் அதிகாரி வீட்டு விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பொதுவாக, மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள்லே ரேஷன் கடை திறந்திருக்கணும்னு அரசு உத்தரவு. ஆனால், அதிகாரி வீட்டு விசேஷம் நடப்பதால, அரசு உத்தரவை மீறி இந்த 19 கடைகளையும் அடைக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ஊழியர்கள் விழாவுல கலந்துக்கிட்டு வேலை பார்க்கச் சொல்லிட்டாங்களாம். ஊழியர்களும் கடைகளை அடைத்து விட்டு விழாவை சிறப்பிச்சுருக்காங்க. விநாயகர் சதுர்த்திக்காக அரிசி, பருப்பு, ஜீனி வாங்கப்போன அப்பாவி பொதுஜனங்க கடை வாசல்லயே ரொம்ப நேரமாக நின்னுக்கிட்டிருந்தாங்க. அதுல சிலர் ஊழியர்களை செல்போன்ல தொடர்பு ெகாண்டு, ‘‘ஏன் ரேஷன் கடையை திறக்கலை’’ என்று கேட்டாங்களாம்... அதற்கு, ‘‘இன்று கடையை அடைக்க உத்தரவு வந்திருச்சு... அப்புறம் வந்து வாங்கிக்குங்க...’’ என்று கூறி விட்டார்களாம்... கடையை திறந்திருவாங்கன்னு நம்பிக்கையோடு, நண்பகல் 12 மணி வரை காத்திருந்த மக்கள் டென்ஷனாகி ஏமாந்து போய்ட்டாங்களாம்... அரசு உத்தரவை மீறி கடைகளை அடைச்சதை கண்டித்து, கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்காங்கப்பா. அவராவது மக்களாட்சி நிலைநாட்டுவாரா அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதே ரேஷன் கடைக்கு போய் ஏமாந்தவர்களின் கேள்வியாக இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ பிரிச்சாலும் தொல்லை... பிரிக்காவிட்டாலும் தொல்லை என்று இலை கட்சி தொண்டர்கள் தலையில் அடித்து கொள்வதை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது அரசியல்வட்டாரத்தில் இனிப்பு, கசப்பு கலந்த கலவையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ரீதியாக தங்களுக்கு பதவிகள் கிடைக்கும் என்ற வகையில் இலை நிர்வாகிகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். அதிமுக கிழக்கு மாவட்டத்தில் எம்எல்ஏ ஒருவரும், மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் ஒருவரும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவதே இதற்கு காரணம். தலைநகரான வேலூரில் ஒருவருக்கு கூட பொறுப்பாளர் பதவி தரப்படவில்லையாம். இதுதான் வேலூர் தலைநகரில் உள்ள இலை கட்சியின் தலைகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மற்றவர்கள் எல்லாம் வேலூரை கோட்டையாக பார்க்கும்போது... இலை கட்சியில வேலூரை ஒரு குடிசையாக கூட பார்க்க மறுப்பது ஏன் என்ற கொந்தளிப்பில் இருக்காங்களாம். தற்போது மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதால் தலைநகரான வேலூருக்கு பகுதியில் உள்ளவர்களையே முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்களாம்.

இந்நிலையில், புதிதாக வரையறுக்கப்பட உள்ள வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம். இதனால், அந்த சேர்ந்தவர்களுக்கே பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஒருவர், காட்பாடி முன்னாள் வேட்பாளர் ஒருவர், குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர், வேலூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என்று 5 பேர் காய்களை நகர்த்தி வர்றாங்களாம். ஆனால் இவர்களில் இரண்டு பேர் கிப்ட் கட்சிக்கு போய் தாய் வீடான இலைக்கு திரும்பி வந்தவர்களாம். இதனால் மற்ற மூன்று பேரில் ஒருவருக்கு மட்டுமே அதிமுக மாவட்ட செயலாளராக வாய்ப்பு கிடைக்கும் என்று அதிமுகவினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது... மாவட்டதை பிரித்தோம். தலைவலியை வரவழைத்து கொண்டோம் என்கிற குரல் ராயப்பேட்டையில் இருந்து கேட்பதாக கட்சி ெதாண்டர்களிடையே பேச்சு ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்