SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-31@ 00:07:35

‘‘கன்டெய்னர் லாரி திருட்டுப் போன விஷயத்தில் பெரிய விவகாரம் இருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. விரிவாகவே சொல்றேன்.. வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதியான வாகன உதிரிபாகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்டெய்னர் லாரியில் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்டது. வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் டிரைவர் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதற்கிடையில், மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை திருடிச் சென்றது.  உடனடியாக லாரியின் உரிமையாளருக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். மேலும் ரத்தினகிரி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். முறைப்படி புகார் தெரிவிக்காமல் 20 ஆயிரம் கொடுத்து லாரியை விடுவித்து கொள்வதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது. இதனால், லாரியை விடுவிப்பதாக கூறி போலீசார் பேரம் பேச தொடங்கினர்.

இதற்காக கர்நாடகாவில் இருந்து அரசியல் பிரமுகர்கள் கூட போலீஸ் நிலைய வாசலில் காத்திருந்தனர். இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகுதான் போலீசார் லாரியை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதற்காக லாரி திருட்டு போன நேரத்தையும், மீட்கப்பட்ட நேரத்தையும் மாற்றி குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. 2 நாட்களாக போலீஸ் நிலையத்தில் நடந்த பேரத்தில் அங்கிருந்தவர்கள் 1.50 லட்சம் வரை பணம் பார்த்துவிட்டதாக போலீசாரே பேசிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி நகரில் சமூக ஆர்வலரை கடுமையா தாக்கியிருக்காங்களே..’’ ‘‘ம்ம்...பொருளாதார வீழ்ச்சி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நேரடியாக பாஜவினரிடம் கேள்வி கேட்க போறேன்னு சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ், பேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு புறப்பட்டுள்ளார். இந்த பதிவை பார்த்தவுடன் பாஜ மாவட்ட தலைவரும், பேஸ்புக்கில் கட்சி அலுவலகத்தின் முகவரியை பதிவிட்டு, விளம்பரம் தேட வரும் சமூக ஆர்வலரை வரவேற்கிறோமுனு பதிவிட்டுருக்காரு... அதை பார்த்த பாஜவினர், கோபத்தில் கொந்தளித்து... இன்றைக்கு ஒரு கை பார்த்துவிடுவோம் என தயாராகியிருக்காங்க. அதுபோலவே சமூக ஆர்வலர் வந்ததும், ரெடியாக இருந்த செருப்பு மாலையை அணிவித்து, அடித்துஉதைத்து அனுப்பியிருக்காங்க. எல்லாத்துக்கும் முன்கூட்டியே பாஜவினர் தயாரான கதை தான், மாங்கனி நகரில் ஹாட் டாபிக்காக ஓடிட்டிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கல்வித்துறை விவகாரம் ஏதுமிருக்கா..’’ ‘‘இருக்கே.. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட முகிழ்தகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை துவக்கி ஒரு ஆசிரியரையும் நியமிச்சிருக்காங்க... இந்த ஊருக்கு சில மைல் தூரம் நடந்து போகணுமாம்... அதனால அந்த ஆசிரியரை, வட்டார கல்வி அலுவலரான ‘தாய்மொழித் தலைவி’ பொருள் தருகிற பெயரைக் கொண்டவர், வருவாய் கருதி வேறு பள்ளிக்கு மாற்றல் உத்தரவு கொடுத்துட்டாராம்... அந்த ஆசிரியரும் அங்கே ேபாய் சேர்ந்திட்டாராம்... இதனால முகிழ்தகம் பள்ளிக்கு ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்பட்டதாம்... ஆனால் அரசு ஏட்டில் ஆசிரியர் பணியில் இருப்பதாகவே இருக்கிறதாம்... கடந்த ஒரு மாதமாக இதே நிலைதானாம்... ஏற்கனவே இங்கே 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியைதான் பாடம் நடத்திட்டு வர்றாங்களாம்.. இவங்கதான் எல்கேஜி, யுகேஜி வகுப்பும் எடுக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மேல சொல்லுங்க..’’. ‘‘ம்ம்... மாவட்ட கல்வி அலுவலர் துவங்கி உயரதிகாரிகள் வரை மக்கள் மனுக்கொடுத்தும் ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லையாம்... திருவாடானை தாலுகாவில், ஒற்றை இலக்க எண்ணில் மாணவர்கள் உள்ள பள்ளியில் இரு ஆசிரியர்கள் உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியரே இருந்து வருகிறாராம்... இதனால் ‘ஆசிரியர் இல்லை.. ஆனால் இருக்கிறார்’ என்ற நிலைதான் இருக்கிறதாம்... இதற்கு பின்னணியில் ஆளுங்கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகி இருப்பதாகவும் பேசிக்கிறாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்