SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியால் அதிருப்தி `புதிய இந்தியாவிற்கு வருக’: ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்

2019-08-30@ 00:15:57

புதுடெல்லி: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வெர்னான் கோன்சால்விடம், மும்பை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருப்பதை கேலி செய்யும் வகையில், `புதிய இந்தியாவிற்கு வருக’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர்  ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், சமூக ஆர்வலர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெர்னான்  கொன்சால்வ் ஆகியோர் கடந்த 2018 ஜூனில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கொன்சால்வ் உள்ளிட்ட அனைவரின் ஜாமீன் மனுவும் இதனை விசாரிக்கும் தனி நீதிபதி சாரங் கோட்வால் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வெர்னான் கொன்சால்வ் வீட்டில் நடத்தப்பட்ட  சோதனையில் பல்வேறு  புத்தகங்கள், சிடி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் லியோ  டால்ஸ்டாயின் `வார் அண்ட் பீஸ்’ நாவல், கபீர் கலா மன்ச்சின் `ராஜ்ய தாமன்  விரோதி’ சிடி ஆகியவை இருந்தன,’ என புனே போலீஸ் தரப்பில்  கூறப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, மாநிலத்துக்கு எதிரான கருத்துடைய `ராஜ்ய தாமன்  விரோதி’ சிடி, மற்றொரு நாட்டின் மீது தொடுக்கும் போர் குறித்த  `வார் அண்ட் பீஸ்’ நாவல் ஆகியவற்றை வைத்திருந்தது ஏன்? இது போன்று  ஆட்சேபத்துக்குரியவற்றை வீட்டில் ஏன் வைத்திருந்தீர்கள்? இது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்றைய தனது டிவிட்டரில், `வார் அண்ட் பீஸ் போன்ற சிறந்ததொரு நாவலை ஏன் வைத்திருந்தீர்கள் என்று மும்பை உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியிருப்பது,  உண்மையிலேயே வினோதமாக இருக்கிறது. அதுவும் டால்ஸ்டாயின் இந்த நாவல் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ஒன்று. புதிய இந்தியாவிற்கு வருக...’ என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்