SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை..: காலை நிலரப்படி சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,528-க்கு விற்பனை

2019-08-28@ 13:01:54

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், குறைவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்து, ஒரு சவரன் 29,440க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் காலை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது.

கிராமுக்கு 38 அதிகரித்து, ஒரு கிராம் 3,718க்கும், சவரனுக்கு 304 அதிகரித்து ஒரு சவரன் 29,744க்கும் விற்கப்பட்டது. இந்த விலை மாலையில் மாற்றம் ஏற்பட்டு, சவரன் 29,480க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, கிராமுக்கு 5 குறைந்து ஒரு கிராம் 3,680க்கும், சவரனுக்கு 40 குறைந்து ஒரு சவரன் 29,440க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 விலை உயர்ந்து ரூ.3,691க்கும், ஒரு சவரன் ரூ.88 விலை ஏற்றம் கண்டு, ரூ.29,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கம், ஒரு கிராம் ரூ.3,848 ஆகவும், ஒரு சவரன் ரூ30,784 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் விலை அதிகரித்து ரூ.51.30 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.51,300 ஆகவும் இன்று விற்பனையாகி வருகிறது. விலை உயர்ந்தால் அதிகப்படியாக உயர்வதும், குறைந்தால் மிக சிறிய அளவில் குறைவதும் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை உயரும் பட்சத்தில் 30,000த்தை கடக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கதி களங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்