SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருக்கு எதிராக போராடினார் சுமித் நாகல்: முதல் செட்டில் வென்று அசத்தல்

2019-08-28@ 00:39:00

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடருடன் மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோற்றாலும், முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்த சுமித் நாகல் (22 வயது, 190வது ரேங்க்), தனது முதல் சுற்றில் மகத்தான சாதனை வீரரான பெடரரை (சுவிஸ், 3வது ரேங்க், 38 வயது)  எதிர்கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்போட்டியில், நாகல் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடி தேவையற்ற தவறுகளை செய்த பெடரர்,  பின்னர் சுதாரித்துக் கொண்டு 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் அடுத்த 3 செட்களையும் வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட் ஸ்லாம் தொடரில் பெடரருக்கு எதிராக ஒரு செட்டில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் நாகல் விடை பெற்றார். இப்போட்டி 2 மணி, 30 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரருக்கு எதிராக உறுதியுடன்  போராடிய நாகலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (88வது ரேங்க்) 4-6, 1-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவிடம் தோற்று வெளியேறினார். முன்னணி வீரர்கள் ஜோகோவிச், வாவ்ரிங்கா,  நிஷிகோரி, நிஷியோகா ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை மிக எளிதாக  வீழ்த்தினார். இப்போட்டி 59 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆஷ்லி பார்தி, வீனஸ் வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா, மேடிசன் கீஸ், கிறிஸ்டினா மிளாடெனோவிச், சோபியா கெனின், ஜோகன்னா கோன்டா, எலினா ஸ்விடோலினா  ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.கரோலின் கார்சியா, ஏஞ்சலிக் கெர்பர், யூஜெனி பவுச்சார்டு, சமந்தா ஸ்டோசர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்