ப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்: அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால்
2019-08-26@ 13:54:25

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பத்திற்கு எதிராக ஏதேனும் ஒரு ஆதாரங்களை காட்ட முடியுமா? என அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால் விடுத்துள்ளார். பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 21-ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்தது. தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் கடந்த 22-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி (இன்று)வரை நிபந்தனையுடன் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐ ஏற்கனவே கைது செய்துள்ளதால், ஜாமீன் பெற கீழமை நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு கொடுத்த அனுமதி மூலம் ப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார் என்றும் அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்துள்ளார். வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள், அமலாக்கத்துறை விளக்க வேண்டும் எனவும் கபில் சிபல் வாதாடியுள்ளார். மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார். ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களில் என்ன உள்ளது என தெரியாத போது அது குறித்து எவ்வாறு வாதிட முடியும்? என்றும் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை
திமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
கிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது
நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு
நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது