SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமராவதிக்கு கொண்டு வருவதற்கு பதில் பேரவை நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்துச்சென்ற முன்னாள் சபாநாயகர்: இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

2019-08-26@ 03:33:59

திருமலை: சட்டப்பேரவை நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்துச்சென்றது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு ஆட்சியில்  சபாநாயகராக இருந்தவர் கோடல்ல சிவபிரசாத்.  இவர் ஒருங்கிணைந்த ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த ஆந்திர சட்டப்பேரவையில் இருந்த  பொருட்களை அமராவதிக்கு  கொண்டு வரும்போது நாற்காலிகள் உட்பட பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு சென்று சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் முதல்வராகி மூன்று மாதங்களாகியும் சட்டப்பேரவைக்கு சொந்தமான நாற்காலிகளை முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் தனது சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தி  வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவை அதிகாரிகள் நேரடியாக குண்டூரில் உள்ள சிவபிரசாத் வீடுகளுக்கு சென்று, அங்கு நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன் சட்டப்பேரவை அலுவலக செயலாளர்  ஈஸ்வர்ராவ் துல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கோடல்ல சிவபிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘ஐதராபாத்தில் உள்ள சட்டப்பேரவையை அமராவதிக்கு மாற்றம் செய்யும்போது அங்கு பயன்படுத்தப்பட்ட நாற்காலிகள் எனது பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.  தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அந்த நாற்காலிகளை மீண்டும் வழங்குவதற்கு தயாராக உள்ளேன். இதுகுறித்து சட்டப்பேரவை  அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் எப்போது வந்தாலும் அதனை வழங்க தயாராக  இருக்கிறேன்’’ என்றார்.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு  சிவபிரசாத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குண்டூர் மாவட்டம், துல்லூர்  காவல் நிலையத்தில் சட்டப்பேரவை செயலாளர் ஈஸ்வரன் அளித்த புகாரை வைத்து முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத் மீது 409, 411 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திறன் மேம்பாட்டு ஆணைய கார்ப்பரேஷன் சார்பில் குண்டூர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காக 29 லேப்டாப்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த லேப்டாப்களை முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் மகன் கோடல்ல சிவராம் அபகரித்து வைத்திருப்பதாக டிஆர்டிஏ அதிகாரிகள் சத்தினபல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 29 லேப்டாப்களையும் குண்டூரில் உள்ள டிஆர்டிஏ அலுவலகத்துக்கு சத்தினபல்லியை சேர்ந்த சிலர் கொண்டு வந்துள்ளனர். அந்த நேரத்தில்  அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அங்கு இருந்த காவலாளியிடம் லேப்டாப்களை கொடுத்துவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காவல்நிலையத்தில் வழக்கு உள்ள நிலையில் எந்த அனுமதியும் இன்றி 29 லேப்டாப்களை பெற்றது தொடர்பாக காவலாளியை திட்ட இயக்குனர் யுகேந்தர் சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டார்.

மேலும் காணாமல் போனதாக கூறப்பட்ட ேலப்டாப்கள் கோடல்ல சிவராம் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு எந்த இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது? காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால்  மீண்டும் கொண்டு  சென்றவர்களே வைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் சத்தின பல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2019

    11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்