SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுக்குழுவில் வாய் திறக்காமல் இருக்க தலைவர், கவுன்சிலர் பதவி வாரி வழங்குவது பற்றி சொல்கிறார்:

2019-08-26@ 00:23:04

‘‘கஞ்சா வைச்சுட்டு கேஸ் போடுற காலம் எல்லாம் மலையேறி போச்சு ேபால...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெலிபோன் போய் செல்போன் வந்த மாதிரி, கஞ்சா போய் டாஸ்மாக் வந்தது இந்த காலம் என்று தஞ்சை மக்கள் பேசாததுதான் குறை...’’ என்றார் விக்கியானந்தா.‘‘முழுசாதான் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தஞ்சை ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே ஒரு பெட்டிக்கடை இருக்கு. இந்த கடைக்கு எதிரே டாஸ்மாக் கடையும் இருக்கு... டாஸ்மாக் பாரில் மது குடிக்க கூச்சப்படும் சில விஐபிக்கள், நண்பர்கள் இந்த கடையில் வைத்துதான் மது குடித்துவிட்டு செல்வார்களாம். இதனால பெட்டிக்கடை உரிமையாளரை இந்த மெகா தப்புக்காக போலீஸ் கைது செய்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறையில் அடைத்தது. அதன் பிறகு அவர் தனது கடையில் யாரையும் மது குடிக்க விடுவதில்லையாம். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரருக்கு இந்த விஷயம் நன்றாக தெரியும். போலீஸ்காரருக்கு என்ன பணம் டிமாண்டோ தெரியல. சமீபத்தில் அந்த பெட்டிக் கடைக்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் உள்ள போலீஸ்காரர் ஒருவர், நீ இன்னும் சரக்கு விற்றுக் கொண்டு இருக்கிறாயா, உன்னை கைது செய்யாமல் இருக்க ₹5 ஆயிரம் கொடு.. இல்லாவிட்டால் என்னோடு வா என்று மிரட்டினாராம்... எந்த தப்பும் பண்ணாமல் தன்னை மிரட்டி பணம் பறிக்க போகிறார் என்பதை அறிந்து சுதாரித்துக் கொண்ட அந்த கடைக்காரர், நான் மது விற்பதில்லை.. என் கடையில் வேண்டுமானால் சோதனை போட்டுக்கொள்ளலாம் என்றாராம்... அப்போது அந்த போலீஸ்காரர், தான் கொண்டு வந்திருந்த மது பாட்டிலை கடையில் வைத்துவிட்டு நீ மது வைத்திருக்கிறாய், எனக்கூறி செல்போனில் படம் பிடித்தாராம்.. இதை வைத்தே உன்னை கைது செய்வேன் என மிரட்டி கடைக்காரரிடம் ₹5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டாராம். விரக்தி அடைந்த பெட்டிக்கடைகாரர் வணிகர் சங்கத்தில் முறையிட்டாராம். இது தொடர்பாக வணிகர் சங்கத்தினர், டிஎஸ்பியை நேரில் சந்தித்து போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்றார்களாம்.. இதை தான் கஞ்சா போய் டாஸ்மாக் வந்தது என்று சொன்னேன்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கட்சி பொதுக்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி இருக்காங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை வானகரத்தில் கூட்டுவதா, இல்லை தனக்கு சென்டிமென்டான இடத்தில் கூட்டுவதா என சேலம் விவிஐபி யோசித்து வர்றாராம். எப்போதுமே வானகரத்தில் தான் கூட்ட வேண்டுமா என்ன... வேறு இடம், வேறு மாவட்டம் பார்க்கலாமா என்று  யோசனை விரிவடைந்து கொண்டே போகிறதாம். தேவைப்பட்டால் சேலத்தில் பிரமாண்டமாக நடந்தாலும் நடக்கலாம் என்று அடிப்பொடிகள் கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள். எனினும் அனைவருக்கும் பொதுவான இடம் சென்னை என்பதால் சென்னையிலேயே பொதுக்குழு நடக்கும். அதற்கு முன்பாக அனைத்தையும் சரிகட்டும் பணிகளில் 90 சதவீதத்தை சேலம்காரர் முடித்துவிட்டார். அத்துடன் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், மாநகராட்சி மேயர், கவுன்சிலர் பதவிகளை வாரி கொடுத்து தன் பக்கம் இழுக்கும் வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறாராம். இதில் பல பொதுக்குழு நிர்வாகிகள் சேலம் பக்கமும். பல நிர்வாகிகள் ேதனி பக்கமும் சாய்ந்துவிட்டார்களாம். ஆனால் சீனியர் தலைகள் தங்கள் பங்குக்கு சொந்த மாவட்டம் மற்றும் அருகில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்களாம். எப்படியும் கேள்விகள் பறக்கும். அதில் அனலும் இருக்கும் என்கிறார்கள். என்றாலும் கரன்சியும், கவுன்சிலர் பதவியும் அனலை குளிர்வித்து பொதுக்குழுவை சாதாரண கூட்டமாக மாற்றிவிடும் என்கிறார்கள் சேலம்காரரின் அடிபொடிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கமிஷன் வாங்க பேரம் பேசுவதற்கு என்றே ஒரு ரூம் கட்டி இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுரை மேலூர் தாலுகா அலுவலக உயரதிகாரியின் ஜீப் டிரைவராக ‘திசைக்கு தலைமை’ பொருள் கொண்ட ஒருவர் இருக்காரு. தாலுகா அலுவலகத்துல எந்த காரியம் நடக்கணும்னாலும், இவரைத்தான் போய் பார்க்கணுமாம். யார் உயரதிகாரியாக வந்தாலும் இவர் தனது வேலையை ‘செவ்வனே’ நிறைவேற்றுகிறாராம். அதனால யாரு வந்தாலும் இவரை தன் இடது கையாக வைச்சுக்கிறாங்க. சமீபத்துல தாலுகா அலுவலக முகப்புல இருக்கிற இ-சேவை மையத்தை வேறு இடத்திற்கு மாத்தினாங்களாம். இந்த அறையை டிரைவருக்கு ஒதுக்கி, மெத்தை, கட்டில், மின்விசிறி போட்டுக் கொடுத்து தங்க வச்சிருக்காங்களாம். தங்களது காரியத்தை நிறைவேற்ற பணத்தோடு வருவோரிடம் இந்த அலுவலகத்துல தான் டீலிங் நடக்குதாம். காலை நேரத்துல பழைய இ-சேவை மைய கவுன்டர் வழியாகவே, ஏதோ வரி செலுத்துவதைப் போல, வரிசையில் நின்று டிரைவரிடம் ‘கரன்சியை’ கொடுத்துட்டு காரியத்தை முடிச்சுகிட்டு போறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகளை எங்கே கூண்டோடு மாற்றினாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திருவண்ணாமலை காந்தபாளையம் கிராமம் மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகளில் அடைத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு சப்ளை செய்த தகவல் கடலாடி போலீசாருக்கும், போளூர் கலால் போலீசாருக்கும் நல்லாவே தெரியுமாம். கரன்சி கொட்டுவதால் கள்ளச்சாராய விற்பனையை கண்டுக்கலையாம். இந்த ரகசிய கூட்டு உடன்படிக்கை எஸ்பிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பி தலைமையிலான போலீசார் நேரில் சென்று அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது, காந்தபாளையம் மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். அது போளூர் எல்லை என்பதால் போளூர் கலால் பிரிவு காக்கிகள் அனைவரையும் எஸ்பி கூண்டோடு பணியிட மாற்றம் செய்தார்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்