SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாம் லாதம் அபார சதம் நியூசிலாந்து 196/4

2019-08-25@ 00:45:48

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது.பி.சரவணமுத்து மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் 2 நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணி 90.2 ஓவரில் 244 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டிசில்வா 109, கேப்டன் கருணரத்னே 65, குசால் மெண்டிஸ் 32 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, போல்ட் 3, கிராண்ட்ஹோம், சாமர்வில்லி, அஜாஸ் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது (62 ஓவர்). ராவல் (0), வில்லியம்சன் 20, டெய்லர் 23, நிகோல்ஸ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். லாதம் 111 ரன், வாட்லிங் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, நியூசி. 48 ரன் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்