SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீர் நிலவரத்தை அறிய ராகுல்காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு

2019-08-24@ 16:26:07

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் சென்றுள்ள ராகுல்காந்தி உள்ளிட்ட 14 எதிர்கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்த நிலையிலும் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று சென்றனர். காலம்காலமாக ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கினார்.

சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் காலகட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 70,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைகளை ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு குவித்திருந்தது. இதுமட்டும்மல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக, முன்னாள் முதலமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுகிக்கக்கோரி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லியில் திமுக, காங்கிரஸ் உட்பட 14 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, சீத்தாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, குபேந்திர ரெட்டி, ஆனந்த் சர்மா, சரத் யாதவ், மனோஜ் ஜா ஆகியோர் இடம்பெறுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து நேரடியாக காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல உள்ளனர். அங்கிருந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த எதிர்க்கட்சி பிரதிநிதிகளை வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல அனுமதி இல்லாததன் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indo_red_ky111

  இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

 • tower_denmark111

  டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

 • nyuyark_hotelll1

  நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

 • tapah_puyal11

  ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

 • kenya_nairobi11

  கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்