SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகுதிக்கு போராடு

2019-08-24@ 03:31:26

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவன் சமூகத்தின் எத்தனை பெரிய உயரத்தை தொட்டாலும், தனது ஆரம்ப கல்வி கற்றுக்கொடுத்த குருவை மறப்பதே கிடையாது. வெற்றியாளனாக வலம் வரும் மாணவன், சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் இந்த பள்ளியில், இந்த ஆசிரியரிடம் கல்வி கற்றேன். அவர் போட்ட பிச்சை தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்று பெருமைபடுத்த தயங்குவதே கிடையாது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணிக்கு சேர விரும்புபவர்களுக்கு அதற்கு ஏற்றாற்போன்று தகுதி இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. இதற்காக ஆசிரியர் தகுதி தேர்வையும் அவர்களுக்கு நடத்துகிறது. ஆனால் இந்த தேர்வை எழுதியவர்களில் 99.92 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.எட் பட்டம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி தேர்வு எழுதியுள்ளார்கள். இதில் 10 மதிப்பெண்ணுக்கும் குறைவாக 11 பேரும், நிர்ணயிக்கப்பட்ட 82 மதிப்பெண்ணை 324 பேரும், 90க்கு மேல் 24 பேர் மட்டுமே எடுத்துள்ளனர். இந்த முடிவுகளை பார்க்கும் போது கேள்வித்தாள் கடினமாக இருந்ததா, அல்லது தங்களை தேர்வர்கள் சரியாக தயார்படுத்திக்கொள்ளவில்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் அரசு வேலை, நல்ல சம்பளம், விடுமுறை, சலுகை ஆகியவற்றை மனதில் கொள்ளாமல், இந்த பணியை சேவையாக கருதி, அதில் நாம் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் தங்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அப்போது திறமையானவர்கள் கண்டெடுக்கப்படுவார்கள்.

இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அவர்களால் ஏற்படுத்தி கொடுக்க முடியும். ஆரம்ப கல்வி ஆழமாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்த படிப்பில் மாணவர்கள் தனது திறமையை எளிதாக தெறிக்கவிடுவார்கள். எனவே, வினாத்தாள் கடினமாக இருந்தாலும் தகுதி தேர்வை வென்றெடுக்கும் தகுதியை தேர்வர்கள் அனைவரும் வளர்த்துக்கொண்டு சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஆலோசனையாக உள்ளது. தகுதி தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் தலைசிறந்த கல்வியாளர்களை அமர்த்தி வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்தி நாளை ஆசிரியர்களாக சிறப்படைய இருக்கும் தேர்வர்களுக்கு அரசும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே நேர்மையாக தகுதி தேர்வை எதிர்கொள்ளும் பட்டதாரிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்