SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-24@ 00:23:34

‘‘போலி டாக்டர்கள் பெருகிட்டு வர்றாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனை விழாவுக்கு வருகை தந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலி டாக்டர்கள் ஒழிக்கப்படுவார்கள், அவர்கள் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், கோவை புறநகர் பகுதியில் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள், இந்த போலி டாக்டர்களை அணுகுகின்றனர். சத்தம் இல்லாமல் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு கருக்கலைப்பு செய்துவிடுகிறார்கள். இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சுகாதார துறை அதிகாரிகள் நீண்ட காலமாக கொர்.... போட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஒருவேளை ‘‘சம்திங்'' செல்வதால் அமைதியாக இருப்பார்களோ, என்னவோ... என்ற பேச்சும் எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுணங்கி போய் கிடக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இந்த பணிகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர், மாவட்ட வருவாய் அலுவலர் பதவிக்கு இணையானவர். ஆனால், ஒரு மாதம் உருண்டோடிவிட்ட பின்னரும் இவர் இன்னும் பதவி ஏற்கவில்லை. இதனால், விமான நிலைய விரிவாக்கப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயர்அதிகாரி பதவி ஏற்காமல் இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன என யாருக்குமே புரியவில்லை’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டு, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருக்கிறது. இதற்கு பின்னணியில் பாஜ இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை சரிகட்ட ஒரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் பதிலடியாக ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை முறியடிக்க, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருவரை தகுதி நீக்கம் செய்யும் ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏவிடம் கட்சி மாறுவதற்கு பேரம் பேசிய விவகாரத்தில் சபாநாயகரிடம் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆடியோ ஆதாரமும் இருக்கிறது. எதிர்கட்சியின் ஆட்டம் அதிகமானால், தகுதி நீக்க அஸ்திரத்தை கையில் எடுக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. எனவே புதுச்சேரியில் அரசியல் ஆடு, புலி ஆட்டம் துவங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த திருப்பங்கள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க ஒருத்தர் ரொம்ப போராடிட்டு இருக்காராமே..’’

‘‘திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராகவும், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது அதிமுக விவசாய அணியில் மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். என்னதான் மாநில அளவிலான பொறுப்பில் இருந்தாலும், மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பொறுப்பை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறாராம். பொறுப்பை பெறுவதற்காக ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலையில் வலம் வருகிறார். மேலும் தமிழக முதல்வரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தொடங்கிவிட்டாராம். வேலூர் எம்பி தேர்தல் முடிந்த பிறகு பொறுப்பு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஆதரவாளர்கள் நினைப்பை கைவிட்டனர். ஆனால், தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் அக்ரி மட்டும்  ஒரே நினைப்பில் இருப்பதாக ஆதரவாளர்கள் பேசிக்கொள்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விசாரணை பீதியில் கன்ட்ரோலர் கதறுவதாக சொன்னீரே.. அது என்ன விவகாரம்..’’ ‘‘சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத யுனிவர்சிட்டியாக, மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி மாறிக்கிட்டு வருது. ஊழல், முறைகேடுனு, பழைய புகாரு எல்லாம் இப்போ தூசி தட்டி விசாரிக்கப்படுதாம். இதனால லெக்சருங்க எல்லாம் பீதியில இருக்காங்க. இது ஒருபக்கம் இருந்தா, யுனிவர்சிட்டியோட கன்ட்ரோலர் போஸ்டிங் ரொம்ப நாளா காலியா இருக்கு. இதுக்கான  இன்சார்ஜா லெக்சரர் ஒருத்தர,  நியமிச்சிருந்தாங்க. பல மாதங்களாக பணியில இருந்தவரு, கடந்த சில நாட்களா எனக்கு அந்த பொறுப்பு வேணவே வேணாம்னு அடம்பிடிக்கிறாராம். என்னை எப்படியாவது விடுவிச்சிருங்கனு, விசி ஆபிசுக்கு வந்து புலம்பிக்கிட்டு இருக்காராம். அவரோட அலுவலகத்துல இருக்குற சிலரு, இன்சார்ஜ் மேல மொட்ட கடுதாசியா போட்டு தள்ள ஆரம்பிச்சுட்டாங்களாம். பழைய புகார எல்லாம் எடுத்துக்கிட்ட விஜிலென்ஸ், இப்ப வேகவேகமா விசாரிச்சுட்டு வரதாலதான், கன்ட்ரோலருக்கு இந்த பதற்றம்னு யுனிவர்சிட்டில பேசிக்குறாங்க. என்ன நடந்தாலும் கவல இல்ல, நீங்களே கன்ட்ரோலரா இருங்கனு யுனிவர்சிட்டி நிர்வாகம் அவர கன்ட்ரோல் பண்ணி வைச்சுருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்