SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2019-08-23@ 18:54:59

டெல்லி: இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதமாக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் உள்நாட்டு மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. சீனா தனது கரன்சியின் மதிப்பை குறைத்து உள்ளது.பொருளாதார நிலையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. வரி, தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார சீர்த்திருத்தம் தொடர்ந்து நடைபெறக்கூடியது. பொருளாதார மாற்றங்களை அரசு கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி விரைவாக வழங்கப்படுகிறது.

தொழிலாளர் நல சட்டங்களை மீறுவோருக்கு கடும் தண்டனைக்கு பதில் அபராதம் விதிக்க சட்டத்திருத்தம். கம்பெனி கட்டப்படி தொடரப்பட்ட 14000 வழக்குகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கும் கம்பெனிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. வருமானவரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவது இல்லை. ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரி சீர்த்திருத்தத்தால் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் நீக்கம். தொழில் தொடங்குவோருக்கு இடையூறாக உள்ள வருமானவரி சட்டப் பிரிவு 56(2B) நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும்

முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் வரி நீக்கம்

தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களை திருப்பி தர வேண்டும்

வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைப்பு

சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க நடவடிக்கை

பல்வேறு துறைகளில் சீர்த்திருத்தத்துக்கு அரசு முன்னுரிமை

கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாளில் திரும்ப அளிக்கப்படும்

தொழில் தொடங்குவோருக்கான வரி விதிப்பு நீக்கப்படும்

வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை

வருமான வரித்துறை தொடர்பான நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 1 முதல் ஒருங்கிணைக்கப்படும்

வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

நிறுவனங்களின் சமூக சேவையில் குறைபாடுகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது

புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ தனி பிரிவு உருவாக்கப்படும்

அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாளில் அளிக்கப்படும்

தனியார் நிதி நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி

வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்

பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும்

அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது

பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது

பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை அறிவிக்கப்படும்

ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020ம் ஆண்டு வரை ஒத்திவைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்