SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமலாகத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின்... சிபிஐ வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

2019-08-23@ 13:04:20

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26-ம் தேதி வரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் மீண்டும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த முன் ஜாமின் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதே குற்றச்சாட்டு, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதும் உள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக இருவரின் மீதும் சிபிஐ, இதே வழக்கில் சம்பந்தப்பட்ட சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் அவர் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிஐ.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், முன்ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை கைது செய்தாக வாதிட்டார்.

ப.சிதம்பரத்தை உள்நோக்கத்தோடு சிபிஐ கைது செய்துள்ளதாக கபில் சிபல் குற்றம் சாட்டினார். கபில் சிபல் வாதத்திற்கு அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா கடும் எதிரப்பு தெரிவித்தார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என துஷார் மேத்தா வலியுறுத்தினார்.

மேலும் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு செல்லாது என்றும் வாதிடப்பட்டது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். அமலாக்கத்துறைக்கு எதிராக ப.சிதரம்பரம் தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26-ம் தேதி வரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்