SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோபோட் காலம்

2019-08-23@ 01:58:19

செயற்கை அறிவூட்டல் மூலம், மனிதர்களின் சிந்திக்கும் திறன் இயந்திரங்களுக்கு வழங்கும் முயற்சிகள் சிறிது, சிறிதாக வெற்றி அடைந்து வருகிறது. ஒரு மனிதனின் முகத்தை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அடையாளம் கண்டுக்கொள்ளும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், உணவை சமைக்கும் ரோபோக்கள், ஒருவர் கம்ப்யூட்டரில் எதை அடிக்கடி பார்க்கிறார் என்பதை கண்டறிந்து அவருக்கு அந்த விஷயங்களை அள்ளித்தரும் தொழில்நுட்பம் என்று பல்வேறு கம்ப்யூட்டர் செயற்கை அறிவு வெற்றி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாக, ஆண்களுக்கும், பெண்களுக்குமான பாலியல் ரோபோக்களை கண்டுபிடிக்கும் முயற்சியும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. கதகதப்பு, கிறங்கடிக்கும் வார்த்தைகள், வெட்கம் என்று அனைத்து வகை செயல்களையும் இவை செய்யும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆரம்பக்காலத்தில் இவை விலை அதிகமாக இருக்கக்கூடும் என்றாலும், பின்னாளில் விலை மிக குறைந்துவிடும் என்கின்றனர். அப்போது திருமண பந்தம் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்று மனிதவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒரு கம்ப்யூட்டர் ரோபோ, மனிதர்களை போல சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றால், அதற்கு 2.5 பெடா பைட் நினைவுத்திறனை கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது ஒரு குட்டி லாரி அளவுக்கான மெமரி ஸ்பேஸ் வேண்டும். இதில் இருந்து தகவல்களை பெற்று, அது சரிதானா என்று யோசித்து செயல் படவே அதற்கு குறைந்தபட்சம் 10 நிமிடத்துக்கு மேல் ஆகிவிடும். இதனால்தான் இதில் பெரும் சிக்கல் நிலவி வந்தது. ஆனால், ஆரம்பக்காலத்தில் இருந்ததைவிட இப்போது மெமரி எனப்படும் தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் மெமரி ஸ்பேஸ்களின் அளவு சுருங்க ஆரம்பித்துள்ளது. அதேசமயத்தில் கம்ப்யூட்டர்களின் அலசல் செயல்திறனும் அதிகரித்துள்ளது. இதனால் எல்லாத்துறையிலும் ரோபோக்களின் செயல்பாடுகள் பெருக ஆரம்பித்துள்ளன.

இதில் ஒருபடி முன்னேறிச் சென்று, 6 அடி விண்வெளி ஆய்வு ரோபோவை ரஷ்யா தயாரித்துள்ளது. பெடர் என்ற இந்த ரோபோவை நேற்று சோயுஸ் விண்கலம் மூலம் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. காற்று இல்லா இடத்தில் மனிதர்களால்தான் விரைவாக செயல்பட முடியாது. ஆனால், ரோபோக்களுக்கு காற்று வெளியிடையும், காற்றில்லா இடமும் ஒன்றுதான். இதனால் அதன் செயல்பாடுகள் மனித குலத்துக்கு பல்வேறு தகவல்களை அள்ளித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்