SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-23@ 01:18:43

‘‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் எல்லாம் அதிர்ச்சிகரமா இருக்கே..’’ என்று வியப்போடு கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இவ்வளவு நபர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டதற்கு ஒரு பெண் அதிகாரிதான் காரணம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. தகுதியில்லாத நபர்கள், வருகை பதிவேடு இல்லாத நபர்கள், தேர்ச்சி குறைவாக உள்ள நிறுவனங்கள் இவரை அணுகி, கவனிக்க வேண்டியதை கவனித்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களின் கல்விநிலையை பற்றி கவலைப்படவே இல்லையாம். இவர்களிடம் ‘ப’ விட்டமினை வாங்கிக் கொண்டு தேர்ச்சி அடைய வைத்து... தற்போது டெட் தேர்வு எழுதும்போது  ‘ப’ விட்டமின் கொடுத்த நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் கொத்து கொத்தாக பெயிலானார்களாம். அது குறித்து அந்த பெண் அதிகாரியிடம் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கேட்டபோது... டெட் தேர்வில் பெயிலானால் நான் பொறுப்பல்ல. என் எல்லைக்கு உட்பட்டு எல்லோரையும் தேர்சி செய்ய வைத்து டெட் ேதர்வு எழுதும் அளவுக்கு கொண்டு வந்தேன். இப்போது என்னை குறை சொல்லாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் பாடம் ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது என்றாராம். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் ஆசிரியர் படிப்பு படித்தும்...பள்ளியில் சேர தகுதி தேர்வு கட்டாயம் என்பதால் அவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதற்காக ஆசிரியர் படிப்பு படித்தவர்களை குறை சொல்வதை விட... அரசு விதிகளை காற்றில் பறக்கவிட்ட பெண் அதிகாரிதான் காரணமாம். தமிழ்நாட்டில் இவ்வளவு ஆசிரியர்கள் படித்துவிட்டு தகுதி இல்லாமல் போனதற்கு யார் காரணம்... இதற்கான கேள்வியை கிண்டிக்காரர் கேட்டு இருக்கிறாராம். விரைவில் யார் தலை உருளப்போகிறதோ என்று தேர்வில் பெயிலானவர்கள் மற்றும் ‘ப’ கொடுத்து ஏமாந்த நிறுவனங்கள் கூடி பேசி வருகின்றன...’’ என்றார் விக்கியானந்தா.‘ தேர்வு என்ற பெயரில் யார் கல்லா கட்டப் போறாங்க...’’என்றார் பீட்டர் மாமா. ‘‘ஒரு பாடத்துக்கு கேள்வித்தாள் செட் செய்யறது, திருத்துவது, ரெக்கார்ட் பராமரிப்புனு ₹2 ஆயிரம் வரை செலவாகுதாம். ஆனால் தேர்வர்கள் அவ்வளவு எக்ஸாம் பீஸ் கட்டுறதில்லையாம். இதனால் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் செலவாகுதாம். அதனால் சிறப்பு தேர்வுன்னு ஒன்னை நடத்தி, எல்லாரையும் பாஸ் ஆக்க போறாங்கன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கறார் அதிகாரியால் ஊழியர்கள் கலங்கி இருக்காங்களாமே, அவர் யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களுக்கு டாஸ்மாக் மண்டல முதுநிலை அலுவலகம், மதுரை அண்ணாநகரில் செயல்படுது. இந்த மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டு, சுமார் 1,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளதாம். தற்போது புதிதாக ‘முருகப்பெருமான்’ பெயர் கொண்ட ஒருவர் மண்டல முதுநிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாராம். 2 மாதத்திற்கு முன்பு, மதுரை மாநகராட்சி இணை ஆணையராக பொறுப்பேற்ற இவர், துறை அமைச்சரின் சிபாரிசு பெற்று, மதுரை மண்டல முதுநிலை அதிகாரியாக நியமனம் பெற்றதாக சொல்றாங்க. இம்மாதம் பொறுப்பேற்ற இவர், கடை, கடையாக ஆய்வு என்ற பெயரில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், அலுவலகத்தில் இருப்பதே இல்லையாம். மேலும், ஒரு கடைக்கு இவ்வளவு என கட்டிங் நிர்ணயம் செய்துள்ளாராம். அந்த தொகையை மாதந்தோறும் கட்டாவிட்டால், ஆய்வு நடத்தி, சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என மிரட்டுவதாகவும் ஊழியர்கள் புலம்பித் தவிக்கிறாங்கப்பா.

கட்டிங் என்ற பெயரில் நடைபெறும் இந்த வசூல் வேட்டையில் இருந்து எப்படி தப்பிப்பது என ஊழியர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனராம். இது தொடர்பாக டாஸ்மாக் எம்டிக்கு கடிதம் அனுப்ப போறாங்களாம்... இதை கேட்ட குடிமகன் எங்களிடம் ஒரு பாட்டிலுக்கு 5, 10, 20னு வாங்கறீங்களே... அதுகுறித்து உங்களை பற்றி யாருக்கு புகார் அனுப்பலாம் என்று அட்ரஸ் தாங்க என்று சில குசும்புகார குடிமகன்கள் சொல்லி சிரிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்புறம்...’’ ‘‘கடிதம் இல்லை 40 பக்கம் நோட்டு புத்தகம் வாங்கி அதுல எழுதி புகார் கூட அனுப்புங்க நான் பயப்பட மாட்டேன். நான் ஆய்வு செய்வேன் அதை யாரும் தடுக்க முடியாது என்று அதிகாரியால் மிரட்டப்படுகிறோம். இந்த புதியவர், தமிழகத்தில் வடமாவட்டத்தில் டாஸ்மாக்கில் மாவட்ட ேமலாளராக பணியாற்றி, ஏற்கனவே சஸ்பெண்ட் ஆனவரு.... அமைச்சரின் உதவியால் மீண்டும் பணிக்கு வந்து எங்களை மிரட்டுறாரு என மிரண்டு போய் இருக்காராம். ’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாவட்டம் மூன்றாச்சு.. பதவிக்கு முட்டிக் கொள்ளும் நிலையம் அதிகரித்துள்ளதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வீரமானவரை ரொம்பவே அதிர்ச்சிக்கு ஆளாக்கியதாம். இந்த அறிவிப்பை தொடர்ந்து வீரமானவருக்கு செக் வைக்கும் நடவடிக்கையில் கட்சி தலைமை இறங்க உள்ளதாம். தன்னை கடுப்பேற்றவே மாவட்டத்தை 3 ஆக பிரித்துள்ளதாக வீரமானவர் நினைக்கிறாராம். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கும், வேலூர் மாவட்டத்துக்கும் என இரண்டு மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிப்பதில் இலை கட்சியினர் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக வேலூர் மாவட்ட செயலாளர் பதவியை பிடிப்பதில் ஏற்கனவே தினகரனிடம் இருந்து திரும்பி வந்தவர்களான வாசமானவருக்கும், மருத்துவரான முன்னாள் அமைச்சருக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாம். ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளாததுதான் பாக்கி... இதுல யார் ஜெயிக்கப்போறாங்க என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்... அதுபோல ராணிப்பேட்டையில் யார் பெரும்பான்மையினராக உள்ளாரோ அவரை நிறுத்த வேண்டும் என்பதால் அங்கும் பிரச்னையாம்... இதனால இப்போதைக்கு புதுசாக மாவட்ட செயலாளர் பதவி இல்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்