SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ், எமிரேட்ஸ், பஹ்ரைன் 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் மோடி : ஜி7 மாநாட்டில் பங்கேற்பு

2019-08-23@ 01:18:41

புதுடெல்லி: பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ், எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். நேற்று பிரான்ஸ் சென்ற மோடி, அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரதமர் பிலிப்பி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரான்சில் உள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பிரான்ஸில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்களில் பலியான இந்தியர்களுக்காக கட்டப்பட்ட நினைவிடத்தையும் மோடி திறந்து வைக்கிறார். அதன்பின் இன்று இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் மோடி, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானை சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.  

நாளை இரவு பஹ்ரைன் செல்லும் மோடி, அந்நாட்டு இளவரசர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா, மன்னர் ஷேக் ஷமான் பின் இசா அல் கலிபா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசுகிறார். வரும் 25ம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பியாரிட்ஸ் நகரில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். தனது பயணம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘பிரான்ஸ் பயணம் இரு நாடுகள் மற்றும் சர்வதேச அளவிலான அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தும். எமிரேட்சி்ன் ‘ஆர்டர் ஆப் ஜயீத்’ விருதை பெருவதில் ெபருமையடைகிறேன். பஹ்ரைன் இளவரசர், மன்னரை சந்திப்பதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.  

ரூபே ஏடிஎம் கார்டை அறிமுகம் செய்கிறார்

ஐக்கிய அரபு எமிரேட்சில் பிரதமர் மோடி ரூபே ஏடிஎம் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். இதுகுறித்து அமீரக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது. ஐக்கிய அரபு அரபு எமிரேட்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார் இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்தியாவின் ரூபே என்றழைக்கப்படும் ஏடிஎம் கார்டு திட்டத்தை அமீரகத்தில் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த வகை கார்டுகள் விசா, மாஸ்டர் காடுகள் போன்று பயன்படுத்தலாம். கடைகள் ஹோட்டல்கள் சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க இந்த கார்டுகளை பயன்படுத்தலாம். இதற்கான சேவை கட்டணம் இல்லை. இந்தியா, சிங்கப்பூர், பூடான் மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த கார்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் மகாத்மா காந்தியின் நூற்றி ஐம்பதாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்