SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓவர் த்ரோ....

2019-08-23@ 01:18:29

காமராஜர் நினைவு கோப்பை

மதுரையில் ஆண்களுக்கான 17வது  காமராஜர் நினைவு வாலிபால் போட்டி நடந்தது. நேற்று நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியும்,  பொள்ளாச்சி எஸ்டி கல்லூரியும் மோதின. அதில்  25-22, 25-21, 25-19 என்ற நேர் செட்களில் எஸ்ஆர்எம் வெற்றி பெற்று தொடர்ந்து 13வது முறையாக கோப்பை தட்டிச் சென்றது.

அஸ்வின், ரோகித் இல்லை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிசந்திரன் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர்  தனது கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடினார். கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். காயம் காரணமாகதான் அவர் அடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது உடல் திறனுடன் இருக்கும் நிலையில் அவர் ஆடும் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் அடுத்த கேப்டன் என்ற எதிர்பார்ப்பில் உள்ள ரோகித் சர்மாவுக்கும் ஆடும் அணியில் இடமில்லை.

ஆரோக்கியமான போட்டியாளர்

போர்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஸ்டீனோ ரொனால்டோ,  ‘லியோனல் மெஸ்ஸியுடனான போட்டி, தன்னை சிறந்த வீரராக மாற்றியுள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் தனது போட்டியாளரான  அர்ஜென்டீனா கால்பந்து வீரர்   லியோனல் மெஸ்ஸியுடன் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிரட்டும் மழை

மழையால் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்பது தொடர்கதையாகி உள்ளது. ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமும் நேற்று மழையால் பாதிக்கப்பட்டது. தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில்  டாஸ் வென்ற  இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கஸ், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா ஆகியோர் தலா 8 ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2020

  26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • speach20

  இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

 • carnival20

  ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

 • mariyaathai20

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 • viloence20

  டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்