SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த மரத்துக்கு வயது 2624

2019-08-22@ 16:56:28

நன்றி குங்குமம்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணம். அங்கே பாய்ந்து ஓடுகிறது கருப்பு நதி. அதன் கரையில் ஏராளமான  சைப்ரஸ் மரங்கள் வானத்தை நோக்கி வீற்றிருக்கின்றன. இவை இலைகளற்ற சைப்ரஸ் வகையைச் சார்ந்தவை. கடந்த ஆயிரமாண்டுகளாக நடந்த போர், புயல், காற்று, வெள்ளம் என்று எதற்கும் அசையாமல் அப்படியே அவை நிற்கின்றன. இதுவரைக்கும் 99 சதவீத சைப்ரஸ் மரங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அழியாத ஒரு சதவீதத்தில் மிக வயதானவை இந்த மரங்கள்தாம். ஆம்; கருப்பு நதியின் கரையில் உள்ள மரங்களில் ஒன்றின் வயது 2624 என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இயேசு பிறப்பதற்கு முன்பிலிருந்து இந்த மரம் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக வயதான சைப்ரஸ் மரமும் இதுதான். கடந்த வாரம் இந்த மரத்தைப் பற்றிய தகவல் வெளியானதும் மக்கள் கருப்பு நதிக்கரையை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்