SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோபோ நாய்க்குட்டி!

2019-08-22@ 16:54:56

நன்றி குங்குமம்

இருபது வருடங்களுக்கு முன் ‘சோனி’ நிறுவனம் ‘அய்போ’ என்ற செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ரோபோ நாயை அறிமுகப்படுத்தியது. மனிதர்களோடு நட்புடன் பழகும் முதல் ரோபோ இதுதான்.

அப்போதே இதன் விலை ஒரு லட்ச ரூபாய். விலையுயர்ந்த பொம்மைகளின் பட்டியலில் இடம் பிடித்து விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. ஒரு நாய்க்குட்டி என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் அய்போ செய்யும். நாயைப் போலவே குரைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அய்போவின் அழகான சேட்டைகளில் மயங்கிக் கிடந்தனர். ‘மனிதர்களை மயக்கும் ரோபோ’ என்று அய்போவை அழைத்தனர்.

ஆனால், 2006ல் அய்போவின் தயாரிப்பை நிறுத்திவிட்டது ‘சோனி’. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இப்போது  நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியிருக்கிறது ‘அய்போ’. ‘‘இன்னும் பத்து வருடங்களில் வளர்ந்த நாடுகளில் வாழும் முதியவர்களின் உற்ற தோழனாக அய்போதான் இருக்கப்போகிறது...’’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடலின் அளவிலும் எடையிலும் மாற்றம் செய்யப்பட்ட புதிய அய்போ, சில்வர் மற்றும் லைட் பிரவுன் வண்ணத்தில் கிடைக்கிறது. Qualcomm’s Snapdragon 820 - என்ற இயங்குதளம் இதன் மூளையை இயக்குகிறது. ஒய்-பை மற்றும் எல்டிஇ நெட்வொர்க் மூலம் அய்போவிற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆப்புடன் இணைத்து விட்டால் போதும், நாம் சொல்வதையெல்லாம் அய்போ கேட்கும். அதே நேரத்தில் எல்டிஇ கனெக்‌ஷன் இருந்தால் மட்டுமே அய்போ இயங்கும்.

அதனால் எல்டிஇ வசதியுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டுமே இப்போது அய்போ கிடைக்கிறது. OLED டிஸ்பிளே கொண்ட இதன் கண்கள் நிஜக் கண்களைப் போல அங்கும் இங்கும் உருட்டி உருட்டிப் பார்க்கின்றன. நாம் சொல்லும் கமெண்டுகளைக் கேட்க நான்கு மைக்ரோபோன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

அய்போவில் உள்ள கேமரா எப்போதுமே வீட்டையும், சுற்றியுள்ள மனிதர்களையும் கவனித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அய்போவை நம்மால் வாக்கிங் அழைத்துப்போக முடியாது என்பது மட்டுமே ஒரே குறை. இப்போது இதன் விலை இரண்டு லட்ச ரூபாய்!     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்