SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு

2019-08-22@ 15:52:58

அமெரிக்கா: விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. உலகின் பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடியில் இருந்து நீரை எடுத்து வரும் நிலையில், ரிச்சர்ட்ஸ் ரெயின் வாட்டர் நிறுவனம் நீருக்காக வானை நம்பியுள்ளது. நீர் மாசுபாடு அடைந்து வரும் நிலையில், தூய்மையான நீருக்காக 2000-மாவது ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம்,  மழைத்துளிகளை அரை லிட்டர் பாட்டிலில் நிரப்பி விற்று வருகிறது. வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழை நீரில் முதல் 10 நிமிடங்கள் சேகரிக்காமல் விட்டுவிட்டு, அதன்பின் வரும் நீரை, ஃபைபர் கண்ணாடிக் குடுவையில் அடைத்து, அல்ட்ரா வயலெட் ஒளி, ரிவர்ஸ் ஆஸ்மாஸில், குளோரினுக்கு பதில் ஆக்சிஜன் ஆகிய மூன்று நிலை வடிப்பான் மூலம் சுத்திகரித்து விற்று வருகிறார்.

ஆயிரம் சதுர அடி இடத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தால், அதன் மூலம் 2 ஆயிரத்து 82 லிட்டர் தூய்மையான நீர் கிடைக்கும். டெக்சாஸ், கில்ன், மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களில் வீடுகளின் 49 ஆயிரம் சதுர மேற்கூரைகளில் இருந்து ஆண்டில் சராசரியாக 152 சென்டிமீட்டர்  பெய்யும் மழை நீரை சேமித்தால் அதிலிருந்து கிடைக்கும் 60 லட்சம் லிட்டர் நீர் 2 ஆயிரம் பேரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அனுமதி பெற்ற இந்த முதல் நிறுவனத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்