SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராமங்களின் கதி?

2019-08-22@ 00:49:22

பணத்தையே கையில் தொடக்கூடாத அளவுக்கு அத்தனை பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் மயமாக்க துடித்து வருகிறது மத்திய அரசு. பேடிஎம்களை ஊக்கப்படுத்தும் வேளையில் ஏடிஎம்களை நிரந்தரமாக மூடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது டெபிட் கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெருநகரங்களில் வாழும் மக்கள் மட்டுமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிலேயே இன்னும் பெரும்பாலானோர் பணப்பரிவர்த்தனையில் தான் இருக்கிறார்கள். பெருநகரங்களின் நிலையே இப்படி என்றால் டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் கதி? கடந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட 100 கோடி டெபிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதன்பின் டெபிட் கார்டுகள் எண்ணிக்கை குறையத்தொடங்கி விட்டது. நவம்பரில் 99 கோடியாகவும், டிசம்பரில் 95 கோடியாகவும், 2019 ஜனவரியில் 93 கோடியாகவும் குறைந்து விட்டது. இப்போது 90 கோடியாக குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் பாயிண்ட்ஆப்  சேல்ஸ் எந்திரம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் தொகையும் குறைந்துவிட்டது.

2018 அக்டோபரில் 54,298 கோடி பணப்பரிவர்த்தனை நடந்தது. 2019 ஜனவரியில் ₹50,684 கோடியாக குறைந்து இருக்கிறது. நமது நாட்டில் 2019 ஜனவரி கணக்குப்படி 45 கோடி கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 16 கோடி முறை பரிவர்த்தனை நடந்துள்ளது. கிரெடிட் கார்டு பணப்பரிவர்த்தனை ரூ,3400 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் டெபிட் கார்டுகளை ஒழித்துவிட்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கொண்டு வரப்போவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டெபிட் கார்டு தேவை இருக்காது என்றும் எஸ்பிஐ தலைவர் ரஜினிஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் எஸ்பிஐ மூலம் வெளிவருவதால் இதுவும் அதன் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். எனவே அனைத்து வங்கிகளும் இதை பின்பற்றத்தொடங்கும்.

ஆனால் நமது மக்கள் பணத்தை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் டெபிட் கார்டுகளை பாயின்ட் ஆப் சேல் மூலம் பணம் செலுத்த பயன்படுத்திய எண்ணிக்கை 2019 ஜனவரியில் 37 கோடியாக உள்ளது. ஆனால் பணம் எடுக்க 88 கோடி முறை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பெருநகரத்து மக்களே பணப்புழக்கத்தில் இருந்து விடுபடாத போது கிராமப்புற மக்கள் பற்றி கேட்கவே வேண்டாம். டிஜிட்டல் மயத்தை வளர்ச்சியின் ஒரு காரணியாகத்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. கிராமப்புறம் வரையிலும் டிஜிட்டல் மய சேவையை ஊக்குவித்து, புரட்சி செய்தபின் பணமில்லா டிஜிட்டல் மயம் என்றால் சாத்தியம். இல்லை என்றால் கிராமங்களின் கதி அதோகதியாகி விடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்