SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

2019-08-22@ 00:33:59

சென்னை: வெப்ப சலனம் காரணமாக உருவான மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும் வெயில் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மேட்டூர், அரியலூர், தொழுதூர் ஆகிய இடங்களில் 70 மிமீ மழை நேற்று பதிவாகியுள்ளது. கோவிலங்குளம், விருதுநகர், திருச்செங்கோடு 60 மிமீ, திருப்புவனம், சோழவந்தான், ஜெயங்கொண்டம், தேவாலா 50 மிமீ, ஓமலூர், கீரனூர், செந்துறை, பெரம்பலூர், திருமயம் 40மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வட மாவட்டங்களில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், வெப்ப சலனம் மேலும் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்