SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவியை தக்க ைவக்க யாகம் செய்த அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-22@ 00:32:37

‘‘என்ன விக்கி சேலம் விவிஐபி சந்தோஷம் அடைந்த விஷயத்தை கேள்விப்பட்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அவர் சோகமான விஷயத்தை சொல்றேன் கேளு... தமிழக விவிஐபி 3 நாட்கள் சொந்த ஊரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் பஞ்சமே இல்லையாம். வாழப்பாடி அருகே ஒரு ஊரில் பேசியபோது, ‘நான் ஒரு விவசாயி. தற்போது 180 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்றேன். அடுத்து 300 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்யப்போறேன்’ என்று கூறிய போது கைதட்டல் பறந்ததாம். இஸ்ரேல் நாட்டை பற்றி கேள்விப்பட்டபோது தான், வெளிநாடு செல்லும் எண்ணமே வந்தது. ஆனால் தற்போது அங்கு தேர்தல் நடப்பதால் செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டாராம். அப்போது ஸ்டேஜில் நின்றிருந்த இலைக்கட்சிகாரங்களும் முகத்தை  சோகமாக வச்சிக்கிட்டாங்களாம். ஆனால் அவருக்கு சோகமான விஷயம் என்ன தெரியுமா... எட்டு வழிச்சாலைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் கும்பலாக வெளியே காத்திருந்தார்களாம். அவர்களை பார்த்ததும் விவிஐயின் உற்சாகம் காணாமல் போய்விட்டதாம். அவர்கள் தனக்கு எதிராக கோஷம் எழுப்பி விடுவார்களோ என்ற எண்ணத்தில் இருந்தாராம். காவல் துறையினரும் கட்சியினரும் வந்து அவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான் அவருக்கு நிம்மதி வந்ததாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நற்சான்றிதழ் கொடுக்காத அதிகாரிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வர்றாங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கமிஷனர் நற்சான்றிதழ் வழங்கினாராம். இப்பட்டியலில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சிலரின் பெயர்கள் இருந்ததாம். ஆனால், அந்த பெயர்களை கமிஷனர் நீக்கிவிட்டாராம். இதனால், அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படவில்லை. விசாரித்ததில் அவர்கள், மாநகரில் முறையாக சுகாதார பணிகளை ேமற்கொள்வதில்லையாம். அத்துடன், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு பெரிய அதிகாரிகளுக்கு எடுபிடி வேலை செய்து, அவர்கள் மூலமாக பணப்பலன் அடைகிறார்கள் என தெரியவந்தது. இதன்காரணமாகவே கமிஷனர் அதிரடியாக பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கி, நற்சான்றிதழ் வழங்குவதை நிறுத்திவிட்டாராம். இதனால் அப்செட் ஆன சுகாதார ஆய்வாளர்கள்  கடந்த சில தினங்களாக காந்திபுரம் பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் ‘ஸ்வச் பாரத்' திட்டத்தின்கீழ் தூய்மை பணி நடந்து வருகிறது. இதை கண்காணித்து, பணிகளை முறைப்படுத்த வேண்டிய சுகாதார ஆய்வாளர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருகின்றனர். நற்சான்றிதழ் தந்தால் ஒத்துழைப்போம் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்களாம். இப்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் சுகாதார ஆய்வாளர்கள் மீது, கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை காப்பாற்ற பலரும் கோயிலுக்கு செல்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. ஆட்சியில் இருக்க கூடியவர்களுக்கு பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தால் அவர்களுக்கு தோஷம் நீங்க இங்கு பரிகார பூஜை செய்து வழிபடுவது வழக்கமாம். இந்த கோயிலில் தமிழக கால்நடைபாரமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம் நடத்தியுள்ளாராம். தற்போது அமைச்சருக்கு கேது திசை நடப்பதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிடர்கள் கூறியுள்ளார்களாம். சமீபத்தில் ஆளும் கட்சி அமைச்சரை பற்றி, மற்றொரு அமைச்சர் புகார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சமீபத்தில் மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ஏற்கனவே நேரம் சரியில்லை என ஜோதிடம் கூறியதாலும், முன்னாள் அமைச்சர் கூறிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் கேது பகவானை குளிர்விக்க சிறப்பு யாகம் நடந்ததாம். அடுத்த தேர்தல் வரும் வரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாத அளவிற்காக 6 மணி நேரம் பவர்புல் யாகமாக இது நடத்தப்பட்டதாம். ஆனால் அமைச்சரின் உடன்பிறப்புகள், அமைச்சருக்கு தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்யப்பட்டதே தவிர பதவியை தக்க வைத்துக்கொள்ள யாகம் வளர்க்கவில்லை என தெரிவிக்கிறார்களாம். எது எப்படியோ யாகம் எதற்கு என அந்த கேது பகவானுக்கே வெளிச்சம் என கலாய்க்கிறாங்களாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரின் விசுவாசிகள்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மைக் அமைச்சரை மிஞ்சிய ‘கடம்’ அமைச்சர் குறித்து சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘துறை அமைச்சர் பால்வளத்துறை லாபத்தில் போகுதுனு சொல்றார். விவிஐபி நஷ்டத்தில் இயங்குது என்று சொல்கிறார். ஆளுங்கட்சியினர் ஆளாளுக்கு ஒன்று சொல்கின்றனர். இதுல எது உண்மை என்று சமூக ஆர்வலர்கள் கேட்டார்களாம். எங்க அண்ணன் சொன்னதுக்கு அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிட்டீங்க... பால் வளத்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை என்று சொன்னவரை ஏன் பதவி நீக்கம் செய்யல.  ஆளுக்கு ஒரு நியாயமா.. ஒன்னு  பால்வளத்துறையை தூக்கிட்டு எங்க அண்ணணுக்கு பதவி கொடுங்க... இல்லேனா ஒட்டுமொத்தமா எங்கள் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சி விலகி வேறு இடத்துக்கு போய்விடுவோம் என்று பதவிநீக்கப்பட்ட மணிகண்டனின் ஆதரவாளர்கள் கூறுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tvmalai

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

 • pslv_rocket111

  ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 • sweeden_novbal1

  சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

 • brazil_venom11

  நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

 • canada_seaplanee1

  முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்