SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப.சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதால் வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவருக்கே நன்றாக தெரியும்: துரைமுருகன்

2019-08-21@ 17:54:40

மதுரை: ப.சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதால் அவர் தொடர்பான வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவருக்கே நன்றாக தெரியும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் அரசு தொடர்பான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த விபரங்களை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே முறையாக அறிவிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

மதுரை பகுதியைப் பொருத்தவரை அரசின் பல்வேறு துறைகளில் துறை ரீதியான தேக்கங்கள் இருந்துவருவதாக தெரிவித்த அவர், அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாவட்ட பொதுக் கணக்கர் குழு சந்திப்பு நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விவாதித்ததாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்ட வரைவுகள் காலதாமதமின்றி கிடைக்கப் பெறவேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்