SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மைய வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

2019-08-21@ 17:53:29

மதுரை: மதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; மதுரை, சொக்கிகுளத்தில் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் கடந்த 32 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் 242 வகையான 91,600 கொசுக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை புதுச்சேரிக்கு மாற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே தமிழகத்தில் கொசுவால் ஏற்படும் டெங்கு, வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சல் அதிகரித்துள்ளது. அன்றாடம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மதுரை மையத்திற்கு தேவையான ஆராய்ச்சியாளர்களை நியமிக்கவும், தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ‘‘நிர்வாகரீதியான பணிகள் மட்டுமே புதுவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பூச்சியியல் தொடர்பான கள ஆராய்ச்சிப்பணிகள் அனைத்தும் மதுரையிலேயே தொடரும்’’ என்றார்.

இதையடுத்து, மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பூச்சியியல் மையத்தில் நடைபெறும் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையிலுக்கு பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்