SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனதைப் படிக்கும் கருவி

2019-08-21@ 17:34:03

நன்றி குங்குமம் முத்தாரம்

நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லத் தேவையில்லை, எழுத வேண்டியதை, பரிமாற வேண்டிய கருத்துகளை மனதில் நினைத்தாலே போதும்.  உங்களின் மனது நினைப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை தட்டச்சு செய்யும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது தான் ஃபேஸ்புக்கின் அடுத்த  திட்டம்.

இந்தக் கருவி மட்டும் வந்துவிட்டால் நீங்கள் மணிக்கணக்காக ஸ்டேட்டஸ் போட வேண்டியதில்லை. ஃபேஸ்புக்கை லாக்-இன் செய்துவிட்டு இந்த  உலகுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதை நினைத்தாலே போதும். அடுத்த நொடியில் அது பதிவாக உங்கள் முன் காட்சியளிக்கும். அதை ஒருமுறை  படித்துவிட்டு போஸ்ட் செய்ய வேண்டியதுதான் உங்கள் வேலையாக இருக்கும். அத்துடன், பேச முடியாதவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.  இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காகவே ஃபேஸ்புக் சில கோடிகளை ஒதுக்கியுள்ளது. இப்போது சிலரிடம் பரிசோதனை முயற்சிகள்  நடந்து வருகின்றன. அடுத்த வருடத்துக்குள் மனதைப் படித்து தட்டச்சு செய்யும் கருவி சந்தைக்கு வந்து பலரை உறங்கவிடாமல் செய்யலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்