SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அருகே கால்டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்தி சென்ற நபர் கைது

2019-08-21@ 17:18:02

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஓட்டாஞ்சத்திரம் இடையன் மனசு பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்து சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம் - ல் பணம் எடுக்கவேண்டும் என சொல்லி காரை நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது காரை விட்டு ஒருவர் இறங்கிய நிலையில் பின்னல் அமர்ந்திருந்த மற்றொருவர் திடீரென ஓட்டுனர் வசந்தகுமாரை கத்தியால் குத்தியதோடு மட்டுமின்றி அவரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதை அடுத்து இருவரும் காரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த டீக்கடைக்காரர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட எல்லையில் நல்லூர் சோதனை சாவடியில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஒருவர் தப்பியோட மற்றோருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் திருமுருகன் என்பதும் மற்றோருவர் கொங்குசாமி என்பதும் இருவரும் அந்தமான் நிக்கோபார் தீவினை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய கொங்குசாமியை தேடி வருகின்றனர். படுகாயமடைந்த ஓட்டுனர் வசந்தகுமார் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து காரை கடத்தியதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு மணி நேரத்தில் போலீசார் காரை மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்