SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி அருகே பேச்சுப்பாறை அணையின் விரிவாக்கம், பராமரிப்புக்காக 46 வீடுகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றம்

2019-08-21@ 16:38:15

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. பேச்சுப்பாறை அணையை புனரமைப்பதற்காக 40க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் 46 குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றன. இந்நிலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பேச்சுப்பாறை அணையின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் 61 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இரண்டாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதற்காக கூடுதலாக மதகு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதற்கு அருகே அமைந்துள்ள 46 வீடுகளை இடிக்க வருவாய்த்துறை சார்பில் ஓராண்டுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை அடுத்து 47 வீடுகளில் குடியிருப்பவர்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு 3 மாதங்களில் மாற்று வீடுகள் ஒதுக்கி தரப்படும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன், ஜேசிபி மூலம் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதை அடுத்து பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க வீடுகளை சுற்றி தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால்  பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்