SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஒருவர் கைது

2019-08-21@ 15:57:23

நாகை: நாகையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 3 ஐம்பொன் சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டது. நாகை அருகே கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த வாரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் சிலைகள் களவு போனதாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் திருக்குவளை அருகே உள்ள ராமன் கோட்டகம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்த போது மூன்று ஐம்பொன் சிலைகளை சாக்கு மூட்டியில் கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வேதாரண்யம் அரைஞானநல்லுரை சேர்ந்த யோகேஷ்வரன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஒரு ஐம்பொன் சிலை எங்கே? என்பது குறித்தும், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்