SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு வீரர்களுக்கான ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிப்பு: மத்திய அரசு

2019-08-20@ 17:32:29

* இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது

புதுடில்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா, ராஜிவ் கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 29-ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுவர்களுக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

கேல் ரத்னா விருது;
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா விருது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் இந்த விருந்து 1991ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதே செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு வழங்கப்பட்டது. 2019 ஆண்டிற்கான கேல் ரத்னா விருது மல்யுத்த வீரர் பஜ்ரங் பனியா மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா விருது:
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தஜிந்தர்பால்சிங் (தடகளம்), முகமது அனால் யாகியா (தடகளம்), எஸ்.பாஸ்கரன் (ஆணழகன் போட்டி), சோனியா (குத்துச்சண்டை), சிங்க்லென்சனா சிங் (ஹாக்கி), அஜய் தாக்கூர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார் பந்தயம்), பிரமோத் பாகத் (பாரா பேட்மிண்டன்), அன்ஜுன் மவுத்கில் (துப்பாக்கி சுடுதல்), ஹாமீத் ராஜுல் தேசி (டேபிள் டென்னிஸ்), பூஜா தாண்டா (மல்யுத்தம்), பாசத் மிஸ்ரா (குதிரையேற்றம்), குர்பிரித் சிங் சாந்து (கால்பந்து), பூனம் யாதவ்(கிரிக்கெட்), ஸ்வப்னா பரமன் (தடகளம்), சுந்தர் சிங் குஜ்ஜார் (பாரா-தடகளம்), பாமிதிபதி சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன்சிங் (போலோ), ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சாரியா விருது:
பயிற்சியாளர்கள் விமல்குமார்(பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்) மொகந்தர் சிங் தில்லான் (தடகளம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது அறியவிக்கப்பட்டுள்ளது.

தயான்சந்த் விருது:
வேனுவேல் பிரெடெக்ஸ் (ஹாக்கி வீரர்), அருப் பசக்(டேபிள் டென்னிஸ்), மனோஜ் குமார் (மல்யுத்த வீரர்), நித்தின் கீர்த்தனா (டென்னிஸ் வீரர்), லால் ரேம் சங்கா (வில்வித்தை வீரர்), ஆகியோருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு தடை குறைப்பு;
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 2013-ல் ஸ்ரீ சாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தடை 7ஆண்டுகளாக குறைக்கப்பட்டதால் அடுத்த ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ சாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடிவுக்கு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்