SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-08-20@ 00:30:35

* இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிப்பது குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் இன்று  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
* தென் ஆப்ரிக்கா ஏ அணியுடன் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளுக்கு கேப்டனாக மணிஷ் பாண்டேவும், கடைசி 2 போட்டிகளுக்கு கேப்டனாக  ஷ்ரேயாஸ் அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகள் அனைத்தும் திருவனந்தபுரத்தில் ஆக.29, 31, செப். 2, 4, 8 தேதிகளில் நடைபெற உள்ளன.
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆலோசகர்களாக வி.வி.எஸ்.லஷ்மண், முத்தையா முரளிதரன், தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் உள்ள நிலையில் துணை பயிற்சியாளராக ஆஸி. அணி முன்னாள் துணை கேப்டன் பிராட்  ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் மெட்வதேவ், ஒற்றையர் தரவரிசையில் முதல் முறையாக டாப் 5ல் இடம் பிடித்துள்ளார்.
* ஆஸ்திரேலிய அணியுடன் 3வது டெஸ்டில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்