SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிசரவ் வங்கி வட்டியை குறைத்தால் வங்கிகளும் இனி வட்டியை குறைக்கும் : சக்திகாந்த தாஸ் விளக்கம்

2019-08-20@ 00:11:48

மும்பை: ரிசர்வ் வங்கியின் ரெபோ வட்டி விகிதத்துடன் வாடிக்கையாளர்களின் கடன், டிபாசிட் வட்டி விகிதத்தை இணைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட 12க்கும் மேற்பட்ட வங்கிகள் அது மாதிரி மாறும் வட்டி விகிதத்தை தாமாக முன்வந்து அமல்படுத்தி உள்ளன. இதேபோல் மற்ற வங்கிகளும் மாறும் வட்டி விகிதத்தை, குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு அமல்படுத்த வேண்டும். வங்கிகள் அனைத்தும் ஒரே மாதிரியான முறையில் செயல்பட்டால்தான் நிதி நிர்வாக முறையில் மாற்றத்தை விரைவுபடுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். ஸ்டேட் பாங்க் முதலாவதாக ரெபோ வட்டி விகிகத்தத்துடன் வாடிக்கையாளர்களின் கடன்கள், டெபாசிட் வட்டி விகிதத்தை கடந்த மே மாதம் இணைத்தது. வீட்டு கடன் வட்டியை கடந்த ஜூலையில் இணைத்தது. இதையடுத்து, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க், கனரா பாங்க் உள்பட 6 முக்கிய வங்கிகள் மாறும் வட்டி விகிதத்தை அமல்படுத்தப் போவதாக கடந்த வாரம் அறிவித்தன. நிதி நிமைையில் மோசமாக உள்ள வங்கிகள் இந்த மாறும் வட்டி விகிதத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன. அவற்றை நிர்பந்தம் செய்ய ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோ வட்டியை ரிசர்வ் வங்கி 35 அடிப்படை புள்ளிகளை அதாவது 0.35 சதவீதம் வட்டியை குறைத்தது. கடந்த 9 ஆண்டுகளில் இருந்ததைவிட குறைவாக 5.4 சதவீதமாகக் குறைத்தது. (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டிதான் ரெபோ வட்டி) வராக்கடன் பிரச்னையில் இருந்து தற்போதுதான் வங்கிகள் மீண்டு வருகின்றன. அதனால், மாறும் வட்டி விகிதத்தை அமல்படுத்த வங்கிகளை நிர்பந்தம் செய்ய ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. ஏனெனில், அவற்றின் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள கால அவகாசம் தர வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. மும்பையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வங்கிகள் மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசினார். அப்போது, மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நிதி நிர்வாகம் மற்றும் மேம்பாட்டில் விரைவான முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் வட்டி விகிகத்தில் மாற்றம் செய்வது அவசியம். அதற்கான நேரம் வந்துள்ளது. இந்த நடைமுறையை அதாவது ரெபோ வட்டியுடன் கடன்கள், டிபாசிட்கள் ஆகியவற்றுற்கான வட்டியை இணைத்து மாறும் விதத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் தாஸ் குறிப்பிட்டார்.

* ரிசர்வ் வங்கியின் ரெபோ வட்டி விகிதத்துடன் வாடிக்கையாளர்களின் கடன்கள், டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மாதம் முதலும் வீட்டுக் கடன் வட்டி விகித்ததை கடந்த ஜூலை முதலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இணைத்துள்ளது. ரெபோ வட்டியுடன் இணைத்த முதல் வங்கி எஸ்பிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

* உலக அளவில் வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வந்தபோதிலும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நிதி ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்