பீகார் எம்எல்ஏ வீட்டில் ஏ.கே.47, கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்
2019-08-19@ 15:46:11

பீகார்: பீகாரில் உள்ள தனது வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். சுயேச்சை எம்எல்ஏ- வான ஆனந்த குமார் சிங்கின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாட்னா வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த போலீசார் , ஆனந்த குமார் சிங்கின் வீட்டில் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை நடைபெற்ற போது ஆனந்த் சிங், அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. யூஎபிஎ என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டதால் நிச்சயமாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என்று போலீசார் தரப்பில் கூறியிருந்தனர்.
ஆனந்த் சிங்-கை கைது செய்யவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆனந்த் சிங் ' நான் தலைமறைவாகவில்லை என்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் நண்பரை காண வந்துள்ளேன் என்று கூறினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வீட்டை கடந்த 14 ஆண்டுகளாக நான் பயன்படுத்தவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை
திமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
கிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது
நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு
நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது