SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ

2019-08-19@ 12:20:29

நன்றி குங்குமம் முத்தாரம்

மனித வாழ்க்கையில் தொழில்நுட்பம் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் வியப்பானது. பெரியவர்கள் மட்டுமல்ல, சிறியவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஆச்சர்ய விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்படியான ஆச்சர்ய விஷயம் இது.

சமீபத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் ரோபோவை சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ளனர்.முன்பெல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் அனைத்தும் வீடு தேடி வந்துவிடுகிறன்றன. நேரில் வாங்குவதை விட விலையும் குறைவு. இதன் அடுத்த கட்டம் தான் வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ரோபோ.

இந்த ரோபோவை ‘ஜாஸ்பர்’ என்று அழைக்கின்றனர். எஸ்.பி.ரோபோடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து இந்த எந்திரனை உருவாக்கியுள்ளனர். 20 கிலோ எடை கொண்ட ஜாஸ்பரால், 10 கிலோ  வரையிலான பொருட்களைத் தூக்கிச் செல்ல முடியும். செல்போன் ஆப் மூலம் ஜாஸ்பரைக் கட்டுப்படுத்தி, அது சரியான வழியில்தான் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்துவிட்டால் இரண்டு மணி நேரம் வரை இடைவிடாமல் ஜாஸ்பர் இயங்குகிறான். தற்போது பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் பாட்டில்களை விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்பட்டுள்ளான். வருங்காலத்தில் கூகுள் மேப்புடன் இணைந்து, பொருட்களை வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்படுவான். புதிய விஞ்ஞானிகளாக பரிணமித்திருக்கும் அந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்