SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிக்கு 3675 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புளூ ஆரிஜின்

2019-08-19@ 11:39:19

நன்றி குங்குமம் முத்தாரம்

பெரு நிறுவனங்களின் விண்வெளிச் சுற்றுலா திட்டம் சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் கனவு செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும்; விரைவில் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்  என்பது. சமீபத்தில் ‘அமேசானி’ன் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், ‘‘முதலில் இமையலைக்குப் போய் அங்கே கொஞ்ச நாள் இருந்து பாருங்கள்.

பிறகு செவ்வாய்க்குப் போவதைப் பற்றி யோசிக்கலாம்...’’ என்று எலன் மஸ்க்கை சீண்டியிருந்தார். இத்தனைக்கும் ஜெஃப் பெஸோஸும் விண்வெளிச் சுற்றுலாவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இதற்காக  ‘புளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

‘‘நாம் எல்லோரும் நிலவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட வேண்டும்...’’ என்று வேடிக்கையாகச் சொல்கிறார் ஜெஃப் பெஸோஸ். மிகக் குறைந்த செலவில், அதிகளவில் மக்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்வதே பெஸோஸின் முக்கிய நோக்கம்.
2005-ம் வருடத்திலிருந்து 15 முறைக்கு மேல் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தியிருந்தாலும், இன்னும் ஆறு சோதனை ஓட்டங்களைச் செய்து பார்த்தபிறகே மக்களை விண்வெளிக்கு  அழைத்துச் செல்லவிருக்கிறது ‘புளூ ஆரிஜின்’. மணிக்கு 3,675 கி.மீ. வேகத்தில் செல்கின்ற இவர்களின் விண்கலம் சோதனை ஓட்டத்தில் விண்வெளிக்குச் சென்றுவர 11 நிமிடங்களே ஆகியிருக்கிறது.

‘புளூ ஆரிஜின்’ இந்த வருடத்தின் இறுதிக்குள் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. தொழில் போட்டியின் காரணமாக எலன் மஸ்க்கை ஜெப் பெஸோஸ் சீண்டியிருக்கலாம் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். ‘வர்ஜின் கேலக்டிக்’, ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘புளூ ஆரிஜின்’ ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. யார் முதலில் மக்களை விண்வெளிக்கு அழைத்துப் போகிறார்கள் என்பது இந்த வருடத்தின் இறுதிக்குள் தெரிந்து விடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்