SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலம் இளம் ரத்தங்களை நம்பர் 4 இடத்துக்காகப் பயன்படுத்திவிட்டோம்: ரவி சாஸ்திரி பேட்டி

2019-08-19@ 09:23:40

மும்பை: நம்பர் 4'-க்கான வீரரை அவர் கண்டுபிடிக்கவில்லை' என்று அவரது பயிற்சியின் கீழ் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோல்வியாக கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு பேசியது. நம்பர் 4'-க்கான பேச்சுத்தான் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியிலும், ரசிகர்களிடையேயும் பேசப்பட்டு வருகிறது. அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ரிஷப் பன்ட் என பல முக்கிய வீரர்களை இந்த இடத்துக்கு பரிசீலித்துப்பார்த்துவிட்டது எனவும்; ஆனாலும் தீர்வு கிடைத்தப்பாடில்லை என கூறப்படுகிறது.

இதனால் உலகக்கோப்பை உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. சமீபத்தில் இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம் செய்யப்பட்டதிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது என கூறப்படுகிறது. இதற்கிடையே, நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் நம்பர் 4 பிரச்னையை எளிதாக இந்திய அணி சமாளித்தது. அதற்கு முக்கியக் காரணம் இளம்வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் ஆவார். இந்தத் தொடரில் ரிஷப் பன்ட்தான் நான்காவது வீரராக களமிறங்கினார். ஆனால், அவர் ஜொலிக்கத் தவறினாலும் ஐந்தாவதாக களமிறங்கிய ஸ்ரேயாஷ் இரண்டு ஒருநாள் போட்டிகளும் அரைசதம் அடித்து சாதித்தார்.

இதனால் இனி இவரை நான்காவது இடத்தில் களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். இந்த விஷயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கவனம் செலுத்திவருகிறோம் எனவும், பலம் இளம் ரத்தங்களை அந்த இடத்துக்காகப் பயன்படுத்திவிட்டோம் என ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை எனவும், இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது? என யுவராஜ் சிங் கேள்வியெழுப்பினார். கடைசியாக ஸ்ரேயாஷ் நம்பர் 4 இடத்துக்குக் கிடைத்துள்ளார். இந்தக் கடினமான சூழ்நிலையில் ஆட்டத்தின் தன்மையை புரிந்துகொண்டு விளையாடுகிறார் என கூறினார்.

அவர் பேட் செய்த விதம் எனக்கு இருந்த பிரஷரை குறைத்தது எனவும், அவரின் ஆட்டம் கேம் சேஞ்சராக இருந்தது என குறிப்பிட்டார். இதுபோல் எந்த இடத்தில் இறங்கினாலும் பொறுப்பை சுமந்துகொண்டு விளையாடுபவர்கள்தான் அணிக்குத் தேவை என கூறினார். ஸ்ரேயாஷைப் பொறுத்தவரை முழுக் கட்டுப்பாட்டுடன் விளையாடி பந்து வீச்சாளர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். வரும் நாள்களில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் இளம்வீரர்கள் அதிகமாக களமிறக்கப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்