SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியில் சீனியர்கள் கை கட்டி, வாய் பொத்தி அமைதி காக்கும் விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-19@ 00:27:59

‘‘இலை கட்சியில் இத்தனை சீனியர் தலைவர்கள் இருந்தும் அடக்கி வாசிப்பது ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எல்லாம் கவனிப்பு தான். ஒத்து வருபவர்களுக்கு சகல மரியாதையுடன் கவனிப்பு... முரண்டு பிடித்தால் தன் கையில் உள்ள காவல் துறை மூலம் ஆதிகால விஷயங்கள் எல்லாம் தோண்டி எடுத்து விரல் நுனியில் விவரங்களை வைத்து பேசி... கலங்கடிக்கிறார். போயஸ்கார்டனுக்கு நினைத்த நேரத்தில் சென்றவர்கள்... சர்வ அதிகாரத்துடன் இருந்தவர்கள் எல்லாம் ஒடுங்கி கிடக்கிறார்கள். காரணம், ‘அந்த’ அனைத்து முக்கிய பைல்களும் சேலம்காரர் வசம் இருப்பதால்தான். அவர் வெளியே விட்டால் அமலாக்க துறை மட்டுமல்ல... லஞ்ச ஒழிப்பு துறையும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவோ அல்லது அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றோ வழக்கு போடலாம் என்பதால் அமைதியாக இருக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.‘‘அப்போ கிப்ட் பைல்...’’‘‘கிப்ட் மட்டுமில்ல சிறைப்பறவையின் பைலும் சேலம்காரரின் டேபிளில் இருக்கிறது. அவர் வெளியே வந்து ஆட்டத்தை கலைக்கப் பார்த்தால் அவர் மீதும் சாட்டை சுழற்றப்படும்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘பிறந்த நாள் போஸ்டரை பார்த்தீர்களா..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சென்னையின் முக்கிய பகுதிகளில் சிறைப்பறவைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி உள்ளனர். இது அவர் இன்னும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடவில்லை. விரைவில் வருவேன் என்று சொல்வதை போலத்தான் இருக்கிறது. இலைக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது என்றும் கிப்டின் தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தாமரையில் இப்போதே புகைச்சல் தொடங்கி விட்டது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமாம். மாநில தலைமையை யாரும் மதிப்பதே இல்லையாம். அவரவர்கள் இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய டெல்லி தலைவர்களை பிடித்து ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார்கள். சிலர் இன்னும் மாவட்டம்தோறும் பயணம் மேற்கொண்டு ஆட்களை திரட்டி வருகிறார்கள். கட்சி பணியை விட்டுவிட்டு தொண்டர்களை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் தாமரை அப்படியே செயலிழந்து கிடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரொம்பவே தீவிரமாக மாநில தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என்ற ரேஞ்சில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தும் போனில் ஆதரவு கேட்டும் வருகிறாராம்... எது எப்படி இருந்தாலும் டெல்லி தலைமை நினைப்பதுதான் தமிழகத்தில் நடக்கும் என்பதால் ஒரே நேரத்தில் டெல்லிக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கட்சி தலைவர்கள் சென்று வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘ஒரு ஆட்டம் ஓவராகி விட்டதாமே... எல்லாமும் கரன்சி மயமாக உள்ளதாக சொல்றாங்க... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘ம். வேலூரில் உள்ள வீரமானவர் தற்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரா என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவருடன் கைகோர்த்துக்ெகாண்டு கரன்சி மழையில் நனைகிறாராம். பத்திரப்பதிவு துறையில் பணி மாறுதலுக்கும், புதிய பணியிடத்துக்கும் இரண்டெழுத்து நபரிடம் பணம் கொடுத்தால் மட்டுமே பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கிறதாம். கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஒரு சிறிய உதவிக்காக அமைச்சரிடம் சென்றால், அவரும் இரண்டெழுத்து நபரை பாருங்கள் என்று சொல்லி விடுகிறாராம். அவரிடம் போனால் பணம் கொடுத்தால் மட்டுமே பணிகள் செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விடுகிறாராம். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கூட லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டே ேவலைகள் செய்து கொடுப்பதாக குமுறுகின்றனர். அமைச்சரின் செயல்பாடுகளால், ஆளும்கட்சி தொண்டர்களும் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சரை சுற்றி பெரிய பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே உள்ளதால், கட்சியினரை பார்க்க விரும்புவதில்லையாம்.அதைமீறியும் கட்சியினர் யாராவது அமைச்சரை பார்க்க சென்றால் அநாகரிகமாக பேசி வெளியேற்றி விடுவதாக அக்கட்சியினரே புலம்புகின்றனர். அமைச்சருக்கு பணம் மட்டுமே பிரதானமாக இருந்து அதிலேயே அவர் குறிக்கோளாகவும் சுயநலமாகவும் இருந்து வருவதால் எப்படி கட்சியை வளர்க்க முடியும் என்று அதிமுக நிர்வாகிகளும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கே நடக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் ஆளும் இரட்டையர்களுக்கு தெரியுமா, என்ன நடக்கிறது என்று கண்காணிக்கிறார்களா என்பதே தெரியவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தும் கட்சியினர் தொடர்ந்து அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து தலைமைக்கு புகார்கள் அனுப்பி வருகிறார்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘காலாண்டு ெதாடங்கப்போகுது... மாணவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதி அறிவிச்சும் மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களில் சுமார் 38 ஆயிரம் பேர் பிளஸ் 2 படிக்கிறாங்க. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாடநூல் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களாகியும் தமிழ், ஆங்கிலம் தவிர பெருவாரியான பாடப்புத்தகங்கள் இன்னும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லையென்று மாணவர்கள் புலம்பறாங்களாம். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் இருக்காம். சில பள்ளிகளில் வகுப்பிற்கு 10 என்ற முறையில் புத்தகங்களை வழங்கி ெஜராக்ஸ் எடுத்து படிக்கச் சொல்றாங்களாம். இதனால், காலாண்டு பொதுத்தேர்வில் எப்படி மதிப்பெண் எடுப்பது என மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்