SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழிப்புணர்வு தேவை

2019-08-18@ 00:46:22

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை மாநில அரசால் அமல்படுத்த முடியாது, இது மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டம் என்று பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.  ஏற்கனவே இந்த திட்டம் 25 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வெற்றி பெறவில்லை என்றும் அவர்கள் தங்களது நிலைக்கு வலு சேர்க்கின்றனர். இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள் வைத்திருப்பவர்கள், விற்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதுவும் சில வாரங்கள் தொடர்ந்தது அவ்வளவுதான் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாடு முழுவதும் தினசரி 25,940 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகுவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 4,059 டன் குப்பை குறிப்பிட்ட 60 பெரு நகரங்களில் குவிகிறது.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் டெல்லி, சென்னை முதல் 2 இடங்களில் உள்ளது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி 2010-11ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு அதில் வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் நாள் ஒன்றுக்கு 690 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அதற்கடுத்தபடியாக சென்னையில் 429 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அடுத்த இடங்களில் கொல்கத்தா 426 டன், மும்பை 408 டன் குப்பையை உருவாக்குகின்றன.

பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகின்றன. ஆனால், முறையாக இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அதனால்தான் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் குவிகின்றன. பிளாஸ்டிக் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி அளவில் மாணவ, மாணவியரிடையே இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் இதன் பயன்பாடு குறையும் என்பதில் சந்ேதகம் இல்லை. ஒரு சட்டத்தை பிறப்பித்து அமல்படுத்தும் முன்பு, அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தினால்தான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறும். அதிகாரத்தை மட்டும் வைத்து இதுபோன்ற பிரச்னையை தீர்க்க முடியாது. எனவே மக்கள் பங்களிப்புடன் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வாக இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்