SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-18@ 00:40:42

‘‘பிறந்த நாளுக்குள்ள வெளியே வர முடியவில்லையே என்று சிறைபறவை கண்ணீரில் மூழ்கினாராமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெரினாவில் சபதம் செய்த கையோடு சிறைக்கு போனார் சிறைபறவை. எப்படியும் இன்று தன் பிறந்த நாளை வீட்டில் உறவினர்கள், கட்சியினருடன் கொண்டாட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தாராம் சிறைபறவை. கர்நாடகாவில் ஆட்சி மாறியதால் காட்சிகளும் மாறின. இதனால் முன்கூட்டி விடுதலை என்பது தள்ளிபோனது. இப்போது அதைவிட வேதனையான விஷயங்களை தன்னை சந்திக்க வரும் உறவினர்களிடமும் நெருக்கமான கட்சியினரிமும் மட்டுமே பகிர்ந்து கொள்வதாக சிறைதுறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஏன்... கிப்ட்காரர் என்ன ஆனார்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல் ‘செக் மேட்’ அவருக்குதானாம். கட்சி பெயரை சொல்லி பல கோடிகளை முழுங்கிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் கட்சியில் இருந்து தன்னைவிட செல்வாக்கு உள்ளவர்களை வளர விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டு, அவர்களை ஒதுக்க ஆரம்பித்தாராம். இதனால்தான் பலரும் அவர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். எங்களை ஏடிஎம் மிஷினாக நினைக்கிறார் என்று பலரும் வேறு முகாம்களுக்கு சென்றுவிட...

சிலர் சைலன்ட் மோடில் இருக்கிறார்களாம். இதையெல்லாம் கேட்ட சிறைபறவை நான் வெளியே வருவதற்குள், கிப்ட்காரரை பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடச் சொல்லுங்கள்... என் முன்வந்தால் அவரை நான் என்ன செய்வேன் என்றே தெரியாது. இலையை விடாமல் வைத்திருக்க சொன்னால்... நிர்வாகிகளை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து கரன்சி கறப்பதும்... அவர்களை அடிமைகளாக நடத்த நினைத்ததே... இலை கையைவிட்டு போக காரணம் என்பதால் சிறைபறவையின் கோபம் அதிகமாகவே இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரத்த தூங்க விடாம பண்றதுக்கு முயற்சி நடக்குதுபோல...’’ என்று குறும்புதனமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக 2012 ஆண்டு ஏப்.23ல் நித்தியை நியமிச்சாங்க. பலதரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், ஆதீனத்தில் தங்கினார் நித்தி. இடையில நடந்த கசமுசாவில் மதுரை ஆதீனத்துக்கும், நித்திக்கும் இடையே உரசல், புரசல். அதனால ஆதீனம் மீட்புக்குழு, நித்தி நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாங்க... மேலும், மதுரை ஆதீனம் வாரிசு பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கிட்டாரு.... இதற்கிடையில நித்தி மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையவும், ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நித்தி புது திட்டத்தோடு தூங்கா நகரத்துக்குள் நுழைய திட்டமிட்டுள்ளாராம். அதாவது மதுரை ஆதீனம் மடம் அருகிலேயே தனியாக புது மடம் திறக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனியில என்ன தான் நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேனி கலெக்டர் அலுவலகத்தில் பைல் தேங்கியிருப்பதாகவும், கான்ட்ராக்டர்களுக்கு பணம் செட்டில் செயயப்படவில்லைன்னும் செய்தி வெளியாகின. ஆனால், கலெக்டரோ, என் பார்வைக்கு வரும் அனைத்து பைல்களையும் எத்தனை மணி ஆனாலும் பார்த்து முடித்துவிட்டே என் முகாம் அலுவலகத்துக்கு செல்கிறேன். கலெக்டர் அலுவலகத்தில் எந்த பைலும் ெபண்டிங் கிடையாது. மாவட்ட அளவில் டெண்டர் கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளுக்கும் பணம் செட்டில் செய்யப்பட்டு விட்டது. எந்த வகையிலும் எந்த பைலும் நிலுவையில் இல்ைலன்னு தேனி கலெக்டர் மறுத்துள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ உதவி தொகைக்கு கூட லஞ்சம் வாங்காம வேலூர்ல வேலை நடக்காதா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சில பழக்கப்பட்ட கைகளுக்கு இது சகஜமா போச்சு... வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதில் வேலூர்ல தேர்தல் நிறுத்தப்பட்டு, தாமதமாக நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளால், வேலூர் மாவட்டத்தில் தற்போதுதான் ₹2 ஆயிரம் உதவித்தொகை பெறுபவர்களை அதிகாரிகள் பட்டியலிட தொடங்கியுள்ளனர். காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறையில் சுமார் 600 பேரிடம் தலா ₹150 லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளதாம். அதோடு வெரிபிகேஷன் என்ற பெயரில் தனியாக ₹30 வசூலிக்கப்பட்டதாம். இதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ளவர்களை, வேலூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கணக்காளர் பயன்படுத்திக் கொள்கிறாராம். ஏழைகளுக்காக வழங்கும் பணத்தை கூட அதிகாரிகள் பங்கு பிரிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று அடிமட்ட ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவர்களிடம் ₹1 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது...’’ என்று வேதனையுடன் தெரிவித்தார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல யாருக்கு அல்வா கொடுத்தாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெல்லையில் பாஸ் என்கிறவர் போலீஸ் கமிஷனராக இருந்த போதுதான் பட்டப்பகலில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை சம்பவம் நடந்தது. கொலையாளிகளை கைது செய்ய முடியாமல் மாநகர போலீஸ் ஒரு வாரம் திணறியது. ஒரு வழியாக ஒற்றை நபர்தான் மூவரையும் கொலை செய்தார் என போலீஸ் கைது படலத்தில் இறங்கியது. இதற்கு பின்னர்தான் சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டதைவிட நெல்லை குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை போலீஸ் கமிஷனராக வெள்ளையானவர் நியமிக்கப்பட்டுள்ளதுதான் நெல்லை முழுவதும் பேச்சாக கிடக்கிறது. வெள்ளையானவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். சென்னையில் தாதாவாக வலம் வந்த வீரமணியை சுட்டுக் கொன்றவர். ரவுடிகள் ராஜ்யம், கொலை, கொள்ளை அதிகரித்துள்ள நெல்லையிலும் விரைவில் என்கவுன்டர் இருக்கும். அதற்கு முன்னோடியாகத்தான் வெள்ளையை ‘டம்மி’ பதவியில் உட்கார வைத்துவிட்டு போலீஸ் கமிஷனரையும் மாற்றியுள்ளனர் என்கின்றனர் உள்ளூர் போலீசார்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்