SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியா, தவறா?

2019-08-16@ 00:07:58

உடல் உறுப்புகள் தானம் கிடைக்காததால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் கொடையாளிகளின் தயவுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அரசு வேலையை போன்று வெறும் 3,500 பேருக்கு மட்டும்தான் இந்த அதிர்ஷ்டம், அதாவது உடலுறுப்பு தானம் கிடைக்கிறது. இதில் பலர் மேல் நாட்டைச் சேர்ந்தவர்கள். உயிர்பிரிந்த உடலில் உள்ள பாகங்களை கூட மற்றவர்களுக்கு தானமாக அளிக்க பலர் மறுக்கின்றனர். உறுப்பு தானம் கிடைக்காததால், பலர் துன்பப்பட்டு உயிரை இழக்கின்றனர்.

இதுபோன்ற நிலையை மாற்றி, யாருக்கு எந்த உடலுறுப்பு தேவைப்பட்டாலும் உடனடியாக கிடைக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த, மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜூவன் கார்லோஸ் இஸ்பிசுவா சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னுடைய நவீன ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவரது தலைமையிலான குழுவின் நவீன ஆய்வு மனித குலத்துக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது குரங்கின் உடலில், அதன் இயற்கையான மரபணுவை செயல்படவிடாமல் செய்து, அதன் உடலில் மனித குருத்தணுவை செலுத்தி வளரச் செய்வது. குருத்தணுக்கள் என்பது மனித உடலுறுப்பை வடிவமைப்பது, அதன் செயல்பாடுகள் போன்றவற்றை செய்பவை. இந்த குருத்தணுவை குரங்கின் உடலில் செலுத்தும்போது, அதன் உடலில் மனித உறுப்புகள்தான் வளரும். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், எதிர்க்காலத்தில் உடலுறுப்பு தானத்துக்காக யாரும் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. ஆய்வகங்களில் வளர்க்கப்படும் குரங்குகளில், நமது ரத்த மாதிரிக்கு ஏற்ற குரங்கை கட்டிக் கொண்டு வந்தால்போதும், அதில் இருந்து பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள உறுப்பை அகற்றிவிட்டு, குரங்கின் உடம்பில் வளர்ந்திருக்கும் பாகத்தை பொருத்தி விட முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தாலும், மனித ஆய்வாளர்கள் ஒருபுறம் எச்சரிக்கை விடுத்துள்ளதையும் புறந்தள்ளிவிட முடியாது. இதுபோன்ற ஆராய்ச்சிகள், இயற்கையை மீறி செயல்பட நினைக்கும் விஷயங்களாகும். ஒரு பிரச்னைக்கு, இரண்டு பிரச்னைகளை கொண்டு வந்துவிடக் கூடாது என்கின்றனர் அவர்கள். இந்த விஷயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் எதிர்பார்த்து வரும் நிலையில், அது சரியா, தவறா என்ற விவாதமும் தொடங்கி உள்ளது.


2. ஒரே நாள் உள்ள நிலையில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு: 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது

சென்னை: அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுத்து, 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என்று எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில், அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய ஹிந்து மகா சபா தலைவர் வசந்தகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘கடந்த 1703ம் ஆண்டு கோயில் நிர்வாகிகள் அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்தியபோது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்பு, 1937ம் ஆண்டு சிலை மீண்டும் எடுக்கப்பட்டு 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. பின்னர் 42 ஆண்டுகளுக்கு பிறகு 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது.

தற்போது, ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசம் செய்துள்ளனர். அதே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்ற எந்த ஆகம விதியும் இல்லை. எனவே, எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில், தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்டபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்