SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெளிவு வேண்டும்

2019-08-15@ 02:15:07

இந்தியாவின் அழகு மிக்க மாநிலமும், மதிப்பு மிக்க மாநிலமும், அதிக ரத்தம் சிந்திய மாநிலமும் காஷ்மீர் தான். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், சுதந்திரம் பெற்ற பிறகு அதிக உயிர்பலி இடம் பெற்ற மாநிலம் காஷ்மீர் தான்.  மொத்தத்தில் ரத்த பூமி. அந்த பூமியில் அமைதியை உருவாக்க எடுக்கப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வழியில் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. இப்போது மாநில அந்தஸ்தை பறித்து காஷ்மீர்,  லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததோடு, அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370வது அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு ரத்து செய்து புதிய முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. காஷ்மீர் அமைதிக்காக  எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மத்திய அரசு கூறிக்கொண்டாலும், அதை அமல்படுத்திய விதம், அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் நிலை, தொடர்ந்து தடை உத்தரவு நீட்டிப்பு, தகவல் தொடர்பு துண்டிப்பு என்று  ஒட்டுமொத்த காஷ்மீரும் முடக்கப்பட்டு இருப்பது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஊடகங்கள் கூட உள்ளே நுழைய முடியவில்லை.  அத்தனை கெடுபிடிகள். காஷ்மீருக்குள் யாரும் நுழைய கூட அனுமதி இல்லை.  அந்த மாநில மக்கள் கூட அங்கு போகவும் முடியவில்லை, அங்கிருந்து வரவும் முடியவில்லை.  ஒட்டுமொத்தத்தில் ஒருவிதமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டது போன்று இருக்கிறது காஷ்மீர். அரசின் முயற்சிகளுக்கு கால அவகாசம் கொடுக்கலாம் என்று கூறி உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டது.காஷ்மீரில் ெகடுபிடிகள்  அமல்படுத்தும் விதம் குறித்தும், அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்தும் அனைத்து அரசியல் தலைவர்கள் போல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் விமர்சனம் செய்தார். அதற்குள் பிடித்துக்கொண்டார் அம்மாநில கவர்னர் சத்யபால்  மாலிக். பொறுப்பில்லாமல் பேசக்கூடாது என்று எச்சரித்த அவர், ‘’மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. வேண்டுமானால் தனி விமானம் அனுப்புகிறேன் வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள்’’ என்றார்.

ராகுலும் பதிலுக்கு, ‘’தனி விமானம் ஒன்றும் வேண்டாம். அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து வருகிறேன். பொதுமக்களை எந்தவித கெடுபிடியும் இல்லாமல் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். உடனே மாலிக், ‘’இல்லை  இல்லை. ராகுல் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறார். அவரை காஷ்மீருக்குள் அனுமதிக்க முடியாது’’ என்று பதில் கூறினார். ராகுல் விடவில்லை. ‘’டியர் மாலிக் ஜி, எனது கருத்துக்கு நீங்கள் கூறிய பதிலை பார்த்தேன். உங்கள் அழைப்பை ஏற்று  காஷ்மீருக்கு வந்து மக்களைப் பார்க்க விரும்புகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வரத் தயார். எப்போது வரட்டும்?” என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். அரசியல் வாத, பிரதிவாதங்கள் காஷ்மீர் நிலவரத்தை முன்வைத்து நடந்தாலும்  அங்குள்ள உண்மை நிலைமை இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இன்று சுதந்திர இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா. காஷ்மீர் மாநில மக்கள் எந்தவித சுதந்திரமும் இல்லாமல் ராணுவ நெருக்கடிக்குள் சிறைவைக்கப்பட்டு இருந்தால்  அது நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கரும்புள்ளி. எனவே மிக விரைவில் காஷ்மீரில் ஊரடங்கு நீக்கப்பட்டு இயல்புநிலை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சுதந்திரத்தின் அழகு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்