SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை 10 நாட்கள் நீட்டிக்ககோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2019-08-15@ 02:09:13

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன வைபவத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது  தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி  கோவிந்த ராமானுஜ தாசர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று அறநிலைய துறை அமைச்சர் அறிவித்துள்ளார் என்று  தெரிவித்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்கை ஏற்கமுடியாது. மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்.தரிசனத்தை  நீட்டிக்கக்கோரி பொது நல வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும் என்றார். அப்போது, மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்