SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரியில் மின்இணைப்பு துண்டிப்பு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்: தொமுச சார்பில் முதல்வருக்கு கடிதம்

2019-08-15@ 02:07:31

சென்னை: ‘நீலகிரி மாவட்டத்தில் மழையால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை உரிய ஆவணங்களுடன் அழைத்துச்சென்று பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என, தொமுச சார்பில் முதல்வரின்  தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தொமுச நிர்வாகி சரவணன், அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா,  அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக  மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பார்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் சாலையில் மின்சார கம்பங்கள், வயர்கள் மீது மரங்கள் முறிந்து  விழுந்தன. மின்சாரம் முற்றிலும்  துண்டிக்கப்பட்டுள்ளது.  ஊட்டியின் ஒரு பகுதி, மேல்கவ்வட்டி, குருத்துக்குளி, பார்சன்ஸ்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். எனவே அவர்களை உரிய ஆவணங்களுடன் அழைத்து செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட தானே, வர்தா, கஜா போன்ற புயல் பாதிப்புகளின் போது முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அவர்களை  பணிநிரந்தரம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் பிறகு கண்டு கொள்ளவில்லை. எனவே அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்